Type Here to Get Search Results !

TNPSC திருக்குறள் [பொதுத்தமிழ்] vs திருக்குறள் [UNIT - 8] PROOF & PDF

0
TNPSC GROUP 2/2A, 4 (VAO)


எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

TNPSC GROUP 2/2A & 4 (VAO)

பகுதி – ஆ  இலக்கியம்

1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.

 

UNIT -8 திருக்குறள்

a) மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்

b) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை

c) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்

d) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - மனிதநேயம், சமத்துவம் - முதலானவை

e) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு

f) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

Q1: தமிழர்களின் வேதம் ["The Veda of the Tamils"] என்று அழைக்கப்படும் நூல் [22-01-2022]

(A) தேவாரம்

(B) திருவாசகம்

(C) திருக்குறள்

(D) நாலடியார்

 

Q2: "நாடென்ப நாடா வளத்தன" என்ற குறளில் கூறப்படும் செய்தி [22-01-2022]

(A) நல்ல நாட்டிற்கான இலக்கணம்

(B) நாட்டின் வளம்

(C) நாட்டில் ஏற்படும் தீங்கு

(D) தீய நாட்டிற்கான இலக்கணம்

 

Q3: விழுமந் துடைத்தவர் நட்பு' - என வள்ளுவர் எத்தகைய நட்பைக் குறிப்பிடுகிறார்? [22-01-2022]

(A) கற்றோர் நட்பு

(B) துன்பம் கொடுத்தவர் நட்பு

(C) சான்றோர் நட்பு.

(D) துன்பம் நீக்கிய நல்லோர் நட்பு.

 

Q4: "பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறள் உணர்த்தும் கருத்து யாது? (11-01-2022)

(A) காலத்தின் முக்கியத்துவம்

(B) காக்கையின் வெற்றி

(C) கூகையின் தோல்வி

(D) வேந்தர்களின் வெற்றி

 

Q5: வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. இக்குறட்பாவில் "குறியெதிர்ப்பை" என திருவள்ளுவர் உரைப்பது (11-01-2022)

(A) ஏழைகளிடம் இரக்கம் கொள்ளுதல்

(B) அறவழி நடத்தல்

(c) அண்டை வீட்டாரிடம் அளவு குறித்து வாங்கிய பொருளைத் திரும்பக் கொடுத்தல்

(D) பெருமை கொள்ளுதல்

 

Q6: _____ ______ _____ பசியென்னுந்

தீப்பிணி தீண்ட லரிது.

மேற்கண்ட குறள் யாரைப் பசிப்பிணி தீண்டாது என்கிறது? (08-01-2022)

(A) செல்வந்தரை

(B) பண்பாளரை

(C) தவத்தினரை

(D) பகுத்துண்பவரை

 

Q7: ஒருவன் செல்வம் பெற்றதால், பெற்ற பயனாக வள்ளுவம் உரைப்பது யாது? (20-11-2021)

(A) சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல்

(B) பகைவரால் சுற்றப்பட ஒழுகல்

(C) சான்றோரால் சுற்றப்பட ஒழுகல்

(D) மன்னரால் சுற்றப்பட ஒழுகல்

 

Q8: தாம் கற்றதைப் பிறருக்கு எடுத்துக்கூற இயலாதவரை திருவள்ளுவர் எவ்வாறு உவமிக்கிறார்? (20-11-2021)

(A) மணம் வீசாத மலர்

(B) அழகற்ற மலர்

(C) நிறமற்ற மலர்

(D) பசுமையற்ற மலர்

 

Q9: தந்தை மகற்கு ஆற்றும் நன்றி' - எனும் திருக்குறளில் தந்தை மகனுக்குச் செய்யும் கடனாகக் குறிப்பிடப்படுவது (07-11-2021)

(A) பொருள் சேர்த்து வைத்தல்

(B) வீரனாக உருவாக்குதல்

(C) கற்றவர் சபையில் முந்தி இருக்கச் செய்தல்

(D) தானம் செய்தல்

 

Q10: சுக்கிரநீதி, மனுநூல் முதலியவற்றின் வழி நூல் திருக்குறள் என்பாரின் கூற்றை மறுத்து திருக்குறள் முதல் நூலே என்றவர் (07-11-2021)

(A) நக்கீரனார்

(B) ஒளவையார்

(C) மணக்குவர்

(D) பரிமேலழகர்

 

Q11: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை'

திருவள்ளுவர் 'துப்பாக்கி' என்ற சொல்லிற்கு என்ன பொருள் காண்கிறார்? [18-04-2021]

a. மழைநீர்

b. பாதுகாத்தல்

c. உண்டாக்குதல்

d. உணவு

 

Q12: அறநூல்கள் கூறும் அறங்களில் எல்லாம் தலையாய அறம் என்று திருவள்ளுவர் எதனைக் கூறுகிறார்? [18-04-2021]

a. உதவி செய்தல்

b. அன்பு பாராட்டுதல்

c. பகுத்துண்ணுதல்

d. இன்சொல் கூறுதல்

 

Q13: மக்கள் கல்வி கற்ற அளவிற்கு அறிவு ஊறும்' - இப்பொருளுக்குத் திருவள்ளுவர் கூறும் உவமை எது? [18-04-2021]

a. வெள்ளத் தனைய மலர்நீட்டம்

b. தொட்டனைத் தூறு மணற்கேணி

c. வற்றல் மரம் தளிர்த் தற்று

d. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்

 

Q14: சமய நடுநிலைப் பண்பு" கொண்டது திருக்குறள் என்பார் இக்கூற்றுக்கு காரணம்

1. எல்லாச் சமயத்தவரும் இது எம் நூல் என்று கூறும் சிறப்புப் பெற்றதால்

2. கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உவந்து ஏற்கும் சிறப்புப் பெற்றதால்

3. இனம், சாதி, சமயம். வகுப்பு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதால்

4. மனித இனத்திற்குப் பொதுவான ஒழுக்கமும். அறிவும் அறிவுறுத்தப்படுவதால் (2021 G1)

a. 1 மட்டும் சரி

b. 2 மட்டும் சரி

c. 3 மற்றும் 4 மட்டும் சரி

d. அனைத்தும் சரி

 

Q15: பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு எதைப் போன்றது என திருவள்ளுவர் கூறுகிறார்? (2021 G1)

a. அகநக நட்பது போன்றது

b. நவில்தொறும் நூல் நயம் போன்றது

c. கடுத்ததும் காட்டும் முகம் போன்றது

d. கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் போன்றது

 

Q16: "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்" மரம் போன்றவர்கள் என்று வள்ளுவரால் குறிப்பிடப்படுபவர் யார்? (2021 G1)

a. பயனில் சொல் பேசுபவர்

b. மக்கள் பண்பு இல்லாதவர்

c. அகத்தில் அன்பு இல்லாதவர்

d. பிறரின் பொருளுக்கு ஆசைப்படுபவர்

 

Q17: "__________ இரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்காது எனின்"

மேற்காணும் திருக்குறள் எவ்வினைகள் நடைபெறாது என்று கூறுகிறது? (2021 G1)

a. தர்மம், அன்பு

b. தானம், தவம்

c. தவம், இன்பம்

d. அறம், பொருள

 

Q18: துன்பத்தை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று திருவள்ளுவர் நெறிப்படுத்துகிறார்?

a. அப்படியே ஏற்றுக்கொள்ளுதல்

b. எதிர்த்துப் போராடுதல்

c. துன்பத்திற்கு துன்பம் கொடுத்தல்

d. துன்பத்தின் போது வருந்துதல்

 

Q19: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - இதில் வலியுறுத்தப்படுவது எது? (2021 G1)

a. போலி மரியாதை

b. போலி உண்மை

c. போலி ஒழுக்கம்

d. போலி நடிப்பு

 

Q20: “________ நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி", என வள்ளுவர் எவற்றை வேந்தனுக்குக் கூறுகிறார்? (2021 G1)

a. இயற்றல், ஈட்டல், காத்தல், காத்தவகுத்தல்

b அறம், பொருள், இன்பம், வீடு

c. கொடை, கருணை, நீதி, தளர்ந்த குடிகளைக் காத்தல்

d. மேற்கண்ட அனைத்தும்

 

Q21: பலகற்றும் அறிவிலாதார் என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்? (2021 G1)

a. கற்றோர் அவையில் பேச அஞ்சுகின்றவரை

b. உலகத்தோடு ஒத்து நடக்காதவரை

c. போர்க்களத்திற்குச் செல்ல அஞ்சுகின்றவரை

d. செல்வந்தரைக் கண்டு அஞ்சுகின்றவரை

 

Q22: ________, _____________, ____________ இம்மூன்றும் நீங்கா நிலவாள் பவற்கு.

மேற்காணும் திருக்குறளில் இடம்பெறும் 'இம்மூன்றும்' என்னும் சொல் குறிப்பவை.

a. கல்வி, செல்வம், வீரம்

b. அறம், பொருள், இன்பம்

c. தூங்காமை, கல்வி, துணிவு

d. அன்பு, பண்பு, பாசம்

 

Q23: ......கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”

கஇக்குறளில் திருவள்ளுவர், “எதைக் கூறுவது கனியிருக்கும் போது காயைக் கவர்வதற்கு ஒப்பாகும் என்கிறார்? (13/01/2021)

a. உண்மையிருக்கப் பொய்மை கூறல்

b. இம்மை இருக்க மறுமை பற்றிக் கூறல்

c. இனியவை இருக்க இன்னாதது கூறல்

d. அடக்கமுடைமைக்குப் பதிலாக அடக்கமின்மை பற்றிப் பேசுவது

 

Q24: "___________துணிக கருமம் துணிந்த பின்

_____________என்பதிழுக்கு”

எவ்வாறு ஒரு செயலில் ஈடுபடவேண்டும் என

திருவள்ளுவர் மேற்கூறிய குறளில் அறிவுறுத்துகிறார்? (13/01/2021)

a. நிறையப் பொருள் சேர்த்த பிறகு

b. தானம் செய்த பிறகு

c. நன்றாகச் சிந்தித்து அதற்குப் பிறகு

d. தக்க காலமறிந்து

 

Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/02/unit-8-thirukkural.html


tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்