எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
அலகு 10 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
(i) சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM).
(ii) விகிதம் மற்றும் விகிதாசாரம்.
(iii) தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.
(iv) தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல்
– எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை
1. சுருக்குதல் |
1. சுருக்குக √49+√220+√16+√81 [08-01-2022] a. 15 b. 12 c. 8 d. 7
2. √3√3√3....-ன் மதிப்பு [21-11-2021] a. √3 b. 3 c. √3√3 d. 27
3. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9. அதன் எண்ணுடன்
27 கூட்டும் பொழுது இலக்கங்கள் இடம் மாறுகின்றன எனில் அந்த எண் எது?
[08-01-2022] a. 69 b. 36 c. 47 d. 63
4. கீழ்கண்ட எண்களில் முழு கன எண் எது? [11-01-2020] a. 36 b. 100 c. 512 d. 75
5. சரியான குறியீட்டை நிரப்புக [11-01-2020] 2 ______ 6 – 12 ÷ (4 + 2) = 10 a. + b. × c. – d. ÷
6. P⁰ க்கு சமமானது [11-01-2020] a. 0 b. 1 c. –1 d. P
7. 2¹⁰ இல் பாதி எவ்வளவு [21-11-2021] a. 2⁵ b. 2⁶ c. 2⁹ d. 2⁸
8. X⁴ + 64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள்
எதைக் கூட்ட வேண்டும்? [04-03-2020] a. 4x² b. 16x² c. 8x² d. – 8x²
9. மதிப்பு
காண்க a. 45983 b. 121966 c. 120669 d. 121196
10. சுருக்குக a. 0 b. 1 c. 4356 d. 2171
11. a. 0.538 b. 5.38 c. 0.0538 d. 53.8
12. சுருக்குக a. 1 b. 2 c. 3 d. 4
13. (1-1⁄2) (1-1⁄3) (1-1⁄4) ...........
(1-1⁄100) -யின் மதிப்பு காண்க.
(06/11/2021) a. 1/100 b. 1/50 c. 2/3 d. 99/100
சராசரி, திட்டவிலக்கம் (புள்ளியியல்) 1. ஒரு புள்ளி விவரத்தின் விலக்க வர்க்க சராசரி 6.25 எனில்
அதன் திட்ட விலக்கம் காண்க. [11-01-2020] a. 2.5 b. 0.25 c. 3.25 d. 3.5
2. முதல் 10 இயல் எண்களின் சராசரி மற்றும் விலக்க வர்க்கச்
சராசரியைக் காண்க. [11-01-2020] a. 11/2, 99/12 b. 11/2, 121/4 c. 11/2, 11/2 d. 11/2, 89/12
3. 9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி
8 எனில் x ன் மதிப்பு [04-03-2020] a. 48 b. 13 c. 15 d. 12
4. மூன்று எண்கள் 3 : 5 : 7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின்
சராசரி 60 எனில், அவ்வெண்களில்மிகச்சிறிய எண் யாது? [04-03-2020] a. 36 b. 12 c. 15 d. 48
5. a, 2a, 4a, 6a, 9a இன் இடைநிலை 8 எனில் a இன் மதிப்பு
காண்க [17-04-2021] a. 8 b. 6 c. 2 d. 10
6. தரவுகள் 24, 29, 34, 38, 35 மற்றும் 30 இன் இடைநிலை
அளவு [17-04-2021] a. 29 b. 30 c. 34 d. 32
7. பின்வரும் என் தொகுதிகளில் சராசரி, இடைநிலை மற்றும்
முகடு ஒரே மதிப்பாக அமையும் தொகுதி எது? [17-04-2021] a. 2, 2, 2, 4 b. 1, 3, 3, 3, 5 c. 1, 1, 2, 5, 6 d. 1, 1, 2, 1, 5 |
2. மீப்பெறு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு
(LCM) |
1. 3 மற்றும் 9 ஆகிய எண்களில் மீ.சி.ம 9 அவற்றின் மீ.பெ.வ [22/01/2022] (A) 1 (B) 3 (C) 9 (D) 27
2. இரு சார் பகா எண்களின் மீ.சி.ம. 5005. ஓர் எண் 65 எனில்
மற்றொர் எண் என்ன? [08/01/2022] a. 65 b. 66 c. 1 d. 77
3. 2/3, 4/5 மற்றும் 6/25 ன் மீ.பொ.வ (HCF) யாது? (07/11/2021) a. 2 b. 2/25 c. 2/75 d. 6/25
4. இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா.யின் 6 மடங்காகும்
மீ.பொ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றொரு எண்ணைக் காண்க. [23-02-2021] a. 48 b. 36 c. 24 d. 12
5. இரு எண்களின் மீ.பொ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம
154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல் என்ன?
[23-02-2021] a. 36 b. 26 c. 56 d. 46
7. 96 மற்றும் 120 ஆகிய எண்களால் சரியாக வகுபடக் கூடிய
மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன? [22/01/2022] (A) 10608 (B) 16008 (C) 10080 (D) 18600
8. 1 இருந்து 9 வரையிலான அனைத்து எங்களாலும் வகுபடும் மிகச்சிறிய
எண்ணைக் காண்க. [11/01/2022] a. 2510 b. 2520 c. 2530 d. 2540
9. 35a²c³b, 42a³cb² மற்றும் 30ac²b³ இவற்றில் மீச்சிறு
பொது மடங்கு (மீ.பொ.ம) [LCM] காண்க [11/01/2022] a. 210 a³c³b³ b. 7abc c. 216 a²c³b d. 441 a³c³b²
10. (x+y)², (y+z)³, (z+x)⁴ ன் மீ.பொ.வ (HCF)
[11/01/2022] a. 1 b. x+y+z c. (x+y+z)² d. (x+y)²(y+z)³(z+x)⁴
11. x⁴-1, x²-1 ன் மீ.போ.வ (HCF) காண்க [08/01/2022] a. (x+1)(x-1) b. (x-1)² c. x²+1 d. (x+1)²
12. மீ.போ.வ (HCF) காண்க : [08/01/2022] x²+xy, x³y²+x²y³ a. x(x+y) b. x²+xy c. x³y²+x²y³ d. xy(x+y) |
3. விழுக்காடு |
1. 200 இல் 1/2% ஐக் காண்க [22-01-2022] (A) 1 (B) 20 (C) 50 (D) 100
2. 10,000 இன் 25% மதிப்பின் 15% என்பது _______ ஆகும். [22-01-2022] (A) 375 (B) 400 (C) 425 (D) 475
3. ஒருவருடைய வருமானம் 10% அதிகரித்து அதன்பின் 10% குறைந்தது.
அவருடைய வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன சதவீதம்? [22-01-2022] (A) 0% (B) 1% (C) 10% (D) 100%
4. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது
எனில், அந்த எண்ணைக் காண்க [11-01-2022] a. 180 b. 170 c. 160 d. 150
5. 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின்
விலை ₹96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க.
[11-01-2022] a. ₹ 100 b. ₹ 80 c. ₹ 60 d. ₹ 50
6. ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள்.
பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் _________ஆகும். [11-01-2022] a. 30% b. 70% c. 50% d. 80%
7. ஒரு உலோகக் கலவை 26% தாமிரத்தைக் கொண்டுள்ளது. 260 கிராம்
தாமிரத்தைப் பெற எந்த அளவு உலோகக் கலவை தேவைப்படுகிறது? [11-01-2022] a. 740 கி b. 2060 கி c. 1000 கி d. 10,000 கி
8. 25 மாணவர்களில் 72% பேர் கணித பாடத்தில் திறமையானவர்கள்.
கணித பாடத்தில் திறமையற்றொர் எத்தனை பேர்?
[08-01-2022] a. 5 மாணவர்கள் b. 6 மாணவர்கள் c. 7 மாணவர்கள் d. 8 மாணவர்கள்
9. ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட
நாளில் 14% வருகை புரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை காண்க?
[08-01-2022] a. 36 b. 7 c. 43 d. 38
10. 48 இன் 48% =x இன் 64% எனில் xன் மதிப்பு _____ ஆகும் [08-01-2022] a. 64 b. 56 c. 42 d. 36 |
4. விகிதம் மற்றும் விகிதாசாரம். |
1. y : 36 = 2 : x = 8 : 12 எனில் X மற்றும் y மதிப்புகளை
காண்க? [22-01-2022] (A) 24, 3 (B) 3, 24 (C) 3, 54 (D) 54, 3
2. 1/2, 2/3, 3/4 என்ற விகித சமத்தில் ₹ 782 ஆனது பிரிக்கப்படுகிறது எனில், முதல் பகுதியின் தொகை
என்ன? [22-01-2022] (A) 205 (B) 105 (C) 200 (D) 204
3. ராமு மற்றும் சோமு வாங்கிய இரு மேசைகளில் விலை முறையே
₹750 மற்றும் ₹ 900 எனில் சோமு மற்றும் ராமு வாங்கி மேசைகளின் விலையை
விகிதத்தில் கூறுக [11-01-2022] a. 6:5 b. 5:6 c. 2:3 d. 3:2
4. A, B, C, D என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை
5:2:4:3 என்ற விகிதத்தில் பங்கிடுகின்றனர். இதில் C என்பவர் D ஐ விட 1000 அதிகம்
பெறுகிறார் எனில் Bஇன் பங்கு என்ன?
[11-01-2022] a. ₹ 1,000 b. ₹ 3,000 c. ₹ 2,000 d. ₹ 4,000
5. "666 கிராமுக்கு 6 கிலோகிராம்" என்பது விகிதம்
காண்க. [08-01-2022] a. 111:1 b. 111:10 c. 111:100 d. 111:1000
6. x:4/9 = 3/11:5/33
எனில் x ன் மதிப்பு காண்க: [08-01-2022] a. 3/7 b. 11/15 c. 4/5 d. 3/11
7. x:y = 1:3 எனில் (7x+3y) : (2x+y) = ? (07/11/2021) a. 4:5 b. 5:16 c. 5:4 d. 16:5
8. A:B= 6:12, B:C = 2:27 எனில் A:B:C-ன் விகிதத்தை காண்க.
(07/11/2021) a. 2:6:1 b. 1:2:6 c. 1:6:2 d. 2:1:6
9. y : 36 = 2 : x = 8 : 12 எனில் X மற்றும் y மதிப்புகளை
காண்க. [22-01-2022] (A) 24, 3 (B) 3, 24 (C) 3, 54 (D) 54, 3
10. 1/2, 2/3, 3/4 என்ற விகித சமத்தில் ₹ 782 ஆனது பிரிக்கப்படுகிறது எனில், முதல் பகுதியின் தொகை
என்ன? [22-01-2022] (A) 205
(B) 105 (C) 200 (D) 204 |
5. தனி வட்டி |
1. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ₹ 4,500 அசலுக்கு மொத்த தொகை ₹ 5,000 கிடைத்தால் அதனுடைய தனிவட்டி எவ்வளவு?
[08-01-2022] a. ₹ 500 b. ₹ 200 c. ₹ 20% d. ₹ 15%
2. ஒரு குறிப்பிட்ட தொகையானது 10% வட்டி வீதம் 5 ஆண்டுகளுக்கு
₹ 10,050 கிடைக்கிறது எனில் அசல் எவ்வளவு? [22-01-2022] (A) ₹ 6,500 (B) ₹ 6,700 (C) ₹ 6,000 (D) ₹ 3,350
3. சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வ ழங்கு நபரிடமிருந்து
₹ 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப்
பெ ற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ₹ 79,040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி
வீதத்தைக் காண்க. [11-01-2022] a. 13% b. 11% c. 12% d. 10%
5. ₹ 7,200-க்கு ஆண்டு வட்டி 12 3/4 % என்ற வீதத்தில் 9 மாதங்களுக்கான
தனி வட்டி காண்க. [22-01-2022] (A) ₹ 962.4 (B) ₹ 800.3 (C) ₹ 784.2 (D) ₹ 688.5
6. ரூ. 5,600 க்கு 6% வட்டி வீதம் எத்தனை ஆண்டுகளில் ரூ.
6,720 கிடைக்கும்? [11-01-2022] a. 2 ஆண்டுகள் b. 4 ஆண்டுகள் c. 4 1/3 ஆண்டுகள் d. 3 1/3 ஆண்டுகள்
7. கடனாக வழங்கப்பட்ட அசல் ₹48,000 க்கு 2 ஆண்டுகள் 3 மாத காலத்திற்கு பின் தனி வட்டி
மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ₹55,560 ஆக
இருந்தது எனில் வட்டி வீதத்தை காண்க [08-01-2022] a. 6% b. 7% c. 8% d. 9%
8. எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும்? [22-01-2022] [08-01-2022] (A) 3 1/2 வருடங்கள் (B) 3 1/3 வருடங்கள் (C) 2 1/2 வருடங்கள் (D) 2 1/3 வருடங்கள்
9. ₹ 8,000 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும்,
தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹ 20 எனில் வட்டி வீதம் காண்க. (2021 G1) a. 5% b. 10% c. 15% d. 20%
10. இரு வருடங்களில் ₹ 18,000 மீதான கூட்டு வட்டி, தனிவட்டி ஆகியவற்றின் வித்தியாசம்
₹ 405 எனில் வருட வட்டி வீதம் (2021 G1) a. 12% b. 15% c. 18% d. 10%
11. 2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுக்கு ஓர் அசலுக்குக் கிடைத்த
கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 4 எனில் அவற்றின் அசல் என்ன? (2021 G1) a. ₹ 2,000 b. ₹ 7,500 c. ₹ 10,000 d. ₹ 12,000 |
6. கூட்டு வட்டி |
1. அசல் ₹1,000-க்கு
10% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி காண்க. [22-01-2022] (A) ₹ 190 (B) ₹ 210 (C) ₹ 1210 (D) ₹ 200
2. அசல் ₹ 4,000 க்கு
ஆண்டு வட்டி வீதம் r = 5% ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டு 2 ஆண்டுகளில்
கிடைக்கும் கூட்டு வட்டியை காண்க [11-01-2022] a. ₹ 400 b. ₹ 441 c. ₹ 440 d. ₹ 410
3. ₹ 15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்கு
கூட்டு வட்டி காணவும் [11-01-2022] a. ₹ 4,000 b. ₹ 4,028 c. ₹ 4,058 d. ₹ 4,050
4. ரூ. 1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு
எத்தனை ஆண்டுகளில் ரூ. 1,852.20 ஆகும்
(07/11/2021) a. 1 ஆண்டு b. 2 ஆண்டுகள் c. 3 ஆண்டுகள் d. 4 ஆண்டுகள்
5. அசல் = ரூ. 4,000, ஆண்டு வட்டி வீதம் r = 5%, n= 2 ஆண்டுகள், ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது (07/11/2021) a. ரூ. 320
b. ரூ. 410 c. ரூ. 280
d. ரூ. 450
6. 10% ஆண்டு வட்டியில் அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால்
₹4,400 ஆனது ₹4,851 ஆக
_____ ஆகும் [11-01-2022] a. 6 மாதங்கள்
b. 12 மாதங்கள்
c. 18 மாதங்கள் d. 24 மாதங்கள்
7. ₹1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை
ஆண்டுகளில் ₹1,852.20 ஆகும்
[08-01-2022] a. 2 ஆண்டுகள்
b. 5 ஆண்டுகள் c. 4 ஆண்டுகள் d. 3 ஆண்டுகள்
8. ₹15,625-ஐ 6 மாதங்களுக்கு 16% ஆண்டு வட்டி வீதத்தில் முதலீடு
செய்தால், வட்டி காலாண்டுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டால், கூட்டு வட்டியை காண்க
[08-01-2022] a. ₹ 1,300 b. ₹ 1,325 c. ₹ 1,250 d. ₹ 1,275
9. ₹ 8,000 ஆனது மூன்று ஆண்டுகளில் கூட்டு தொகை ₹ 9,261 ஆகும். கூட்டு வட்டி வீதம் காண்க. (வட்டி ஆண்டிற்கு
ஒருமுறை அசலுடன் சேர்க்கிறது சேருகின்றது)
[08-01-2022] a. 3% b. 4% c. 5% d. 2%
10. கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் 6% விதம் இரண்டாண்டுக்கு வேறுபாடு
ரூ. 18 எனில் அசலினைக் காண்க
(07/11/2021) a. ரூ. 5,100 b. ரூ. 5,000 c. ரூ. 5,500 d. ரூ. 5,200 |
7. காலம் மற்றும் வேலை. |
1. A மற்றும் B ஒரு வேலையை 12 நாட்களில் செய்ய முடியும்.
B மற்றும் C 15 நாட்களிலும், C மற்றும் A 20 நாட்களிலும் செய்யமுடியுமென்றால் அவர்கள்
எத்தனை நாட்களில் அதை ஒன்றாகச் செய்து முடிப்பார்கள். [22-01-2022] (A) 47 நாட்கள் (B) 10 நாட்கள் (C) 23 நாட்கள் (D) 360 நாட்கள்
2. A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர்
தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை ₹ 2,00,000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில் A பெறும் தொகை
______ ஆகும். [22-01-2022] (A) ₹
1,20,000 (B) ₹ 90,000 (C) ₹ 60,000 (D) ₹ 40,000
3. A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார்.
B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும்
செய்து முடிப்பார். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்? [08-01-2022] a. 2 மணிகள் b. 5 மணிகள் c. 7 மணிகள் d. 4 மணிகள்
4. A ஆனவர் B என்பவரை காட்டிலும் வேலை செய்வதில், 3 மடங்கு
வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக
எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து
அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க. [08-01-2022] a. 4 நாள்கள் b. 6 நாள்கள் c. 9 நாள்கள் d. 7 நாள்கள்
5. A ஒரு வேலையை
10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பார். இருவரும் சேர்ந்து அவ்வேலையை
செய்து ரூ. 1,500 ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிடித்துக் கொள்வார்? (07/11/2021) a. ரூ.600, ரூ900 b. ரூ.700, ரூ800 c. ரூ.900, ரூ700 d. ரூ.900, ரூ600
6. நிரப்புக: 5 நபர்கள் 5 வேலைகள் 5 நாட்களில் செய்து முடிப்பார் எனில்,
50 நபர்கள் 50 வேலைகளை ________ நாட்களில் செய்து முடிப்பார். [11-01-2022] a. 5 b. 6 c. 50 d. 10
7. 210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு
வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து
20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை? [11-01-2022] a. 160 b. 162 c. 164 d. 169
8. 12 மாடுகள் ஒரு வயலை 10 நாட்களில் மேய்கின்றது எனில்
20 மாடுகள் அதே வயலை எத்தனை நாட்களில் மேயும்?
[08-01-2022] a. 15 b. 18 c. 6 d. 8
9. 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாட்கள் எடுத்துக்
கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாக சேர்த்தால், அதே வேலையை ______ நாட்களில்
செய்து முடிப்பார். [18-09-2021] a. 7 b. 8 c. 9 d. 10
10. 6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை
செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள்
நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால்
எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்? (13/01/2021) a. 20 நாட்கள் b. 40 நாட்கள் c. 10 நாட்கள் d. 60 நாட்கள் |
8. பரப்பு – கொள்ளளவு |
1. ஒரு இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல்
மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின் அடிப்பக்கத்தை காண்க [11-01-2022] a. 8 செ.மீ b. 24 செ.மீ c. 20 செ.மீ d. 34 செ.மீ
2. ஒரு கோள வடிவ பலூனில் காற்று உந்தப்படும் போது அதன்
ஆரம் 12 செ.மீ - லிருந்து இருந்து 16 செ.மீ ஆக உயர்கிறது. இரு புறப்பரப்புகளின் விகிதம்
காண்க [11-01-2022] a. 9:16 b. 9:14 c. 9:13 d. 9:15
3. ஓர் அலுவலக கட்டட தரையில் 200 சாய்சதுர வடிவிலான ஓடுகள்
பதிக்கப்படுகின்றன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள் 40 செ.மீ. மற்றும் 25 செ.மீ.
எனில், தரையை மெருகூட்ட சதுர மீட்டருக்கு ரூ. 45 வீதம் மொத்த செலவை காண்க? [08-01-2022]
a. ₹ 900 b. ₹ 200 c. ₹ 4,500 d. ₹ 450
4. 63 செ.மீ.² பரப்புள்ள ஒரு நாற்கரத்தின் ஒரு மூலைவிட்டம்
7 செ.மீ. மேலும் எதிர் உச்சிகளிலிருந்து அம்மூலைவிட்டதற்கு வரையப்படும் குத்துக்கோடுகளின்
நீளங்கள் 5 செ.மீ. மற்றும் x செ.மீ. எனில் x-ன் மதிப்பு? [08-01-2022] a. 9 செ.மீ. b. 23 செ.மீ. c. 35 செ.மீ. d. 13 செ.மீ.
5. இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4 : 7 எனில் கன அளவுகளின்
விகிதம் [23-02-2020] a. 4 : 7 b. 64 : 49 c. 16 : 49 d. 64 : 343
6. சமமான ஆரம் மற்றும் உயரம் உடைய கூம்பு, கோளம், உருளை
ஆகியவற்றின் கன அளவுகளின் விகிதம் [03-04-2020] a. 1:4:3 b. 1:3:4 c. 4:3:1 d. 3:4:1
7. மூலைவிட்டங்கள் 6 செ.மீ. மற்றும் 8 செ.மீ. கொண்ட சாய்
சதுரத்தின் பரப்பு [03-04-2020] a. 12 ச.செ.மீ. b. 18 ச.செ.மீ. c. 24 ச.செ.மீ. d. 36 ச.செ.மீ.
8. ஒரு செவ்வக வயலின் அகலம், நீளத்தின் 60% ஆகும். அவ்வயலின்
சுற்றளவு 800 மீ எனில் அவ்வயலின் பரப்பளவை காண்க [18-04-2021] a. 18750 சதுர மீட்டர் b. 37500 சதுர மீட்டர் c. 40000 சதுர மீட்டர் d. 48000 சதுர மீட்டர் |
9. தருக்கக் காரணவியல் புதிர்கள் |
1. A இக்குப் பதில் + எனவும் B இக்குப் பதில் - எனவும்
C இக்குப் பதில் x எனவும் D இக்கும் பதில் ÷ எனவும் எடுத்துக் கொண்டால்
4B3C5A30D2 என்ற அமைப்பின் விடையைக் காண்க. [22-01-2022] (A) 3 (B) 4 (C) 5 (D) 0
2. P என்பது +, Q என்பது -, R என்பது X மற்றும் S என்பது
÷, எனில் கீழ்க்கண்டவற்றில் எது சரியான கூற்று? [2019 G2] a. 36R4S8Q7P4 = 10 b. 16R12P49S7Q9 = 200 c. 32S8R9 = 160Q12R12 d. 8R8P8S8Q8 = 57
3. + என்பது x, – என்பது ÷, X என்பது – மற்றும் ÷ என்பது
+ குறித்தால் 25 + 32 – 4 × 12 ÷ 3 என்பது [23-02-2021] a. 137 b. –125 c. 191 d. –197
4. ஒரு வட்டத்தில், வட்ட மையத்தை நோக்கி p, q, r, s மற்றும்
t ஆகியோர்கள் அமர்ந்துள்ளனர். t என்பவருக்கு இடதுபுறம் அடுத்தபடியாக r என்பவரும்.
s மற்றும் t ஆகிய இருவருக்கும் இடையில் p என்பவரும் அமர்ந்துள்ளார் எனில், r என்பவருக்கு
இடதுபுறம் அடுத்தபடியாக அமர்ந்துள்ள நபர் யார்? [17-04-2021] a. p b. q c. s d. t
5. 8CM@N€T2Y6SαQ$7*W#Z3UE%A4 மேலே உள்ள தொடரிலிருந்து அனைத்து உயிரெழுத்துக்களையும்
நீக்கிய பின் கிடைக்கக் கூடிய புதிய தொடரில் இடது முனையிலிருந்து உள்ள 13 ஆவது உறுப்புக்கு
வலது புறத்தில் இருக்கும் 8 ஆவது உறுப்பை காண்க? (07/11/2021) a. 4 b. 8 c. % d. C
6. 100 வினாக்கள் கொண்ட ஒரு போட்டித் தேர்வில் சரியான விடையளிக்கும்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான விடைக்கு 1/2 மதிப்பெண்
கழிக்கப்படும். மேலும் விடையளிக்காத கேள்விகளுக்கு 1/4 மதிப்பெண் கழிக்கப்படுகிறது.
ஒரு தேர்வர் 88 வினாக்கள் விடையளிக்கிறார். அவற்றுள் 61 வினாக்களுக்கு சரியான விடையளிக்கிறார்
எனில் அவர் பெற்ற மதிப்பெண் எவ்வளவு? [18-04-2021] a. 61 b. 44.5 c. 44.25 d. 54 |
10. பகடை |
1. இரு பகடைகள் உருட்டப்படும் பொது அவற்றின் முக மதிப்புகளின்
கூடுதல் 8 -ஆக இருப்பதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை ? [18-04-2021] a. 4 b. 5 c. 6 d. 7
2. இரண்டு பகடைகள் ஒரு முறை ஒருசேர உருட்டப்படுகின்றன.
முக எண்கள் சமமாக இருக்க அல்லது முக எண்களின் கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு யாது? (07/11/2021) a. 1/9 b. 2/9 c. 4/9 d. 5/9
3. இரண்டு புள்ளிகள் உள்ள முகத்திற்கு எதிரே உள்ள முகத்தில்
எத்தனை புள்ளிகள் உள்ளன? [06-11-2021] a. 1 b. 5 c. 6 d. 3
|
11. காட்சிக் காரணவியல் |
1. கொடுக்கப்பட்ட கோட்டு வடிவ வரைபடம் ஒரு நிறுவனத்தின்
1995—2000 ம் ஆண்டு இலாப சதவீதத்தை குறிப்பதாகும். இத்தகவலைக் கொண்டு 2000 ஆம் ஆண்டின்
செலவினம் 1997 ஆம் ஆண்டின் செலவீனத்தை விட 25% அதிகம் எனில் 2000 ஆண்டைக் காட்டிலும்
1997 ஆம் ஆண்டின் வருமான சதவீதம் எவ்வளவு குறைவு? [17-04-2021]
a. 22.5% a. 25% c. 27.5% d. 31.25%
|
12. எண் எழுத்துக் காரணவியல் |
1. GIVE என்பதன் குறியீடு 5137 மற்றும் BAT என்பதன் குறியீடு
924 எனில் GATE என்பதன் குறியீடு (07/11/2021) a. 5427 b. 5724 c. 5247 d. 2547
2. “NGCH”
என்ற வார்த்தை “LEAF” என்ற வார்த்தையை குறித்தால், “MPQY” என்ற சொற்றொடர் குறிக்கும்
சொற்றொடர் [23-02-2021] a. JMNV b. KNOW c. LOPX d. KOWN
3. CLASSIC என்பதை XOZHHRX என எழுதினால் CHILD என்பதை எவ்வாறு
எழுதலாம்? [23-02-2021] a. XSROW b. XSROV c. XSROU d. SXROW
2. அடுத்த எண் யாது?
[08-01-2022] 840, 168, 42, 14, 7, ______ a. 7 b. 1 c. 0 d. -7
3. அடுத்த எழுத்தை கண்டறிக [08-01-2022] R, U, X, A, D, ________. a. E b. H c. G d. F
4. BDF, CFI, DHL,.... என்ற தொடரின் அடுத்த உறுப்பு யாது?
[11-01-2022] a. CJM b. EIM c. EJO d. EMI
5. கீழே எழுத்துக்களின் தொகுப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துக்களை
இடம்பெயர்ந்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும் அதன்படி, புதிதாக
கண்டுபிடித்த வார்த்தைக்காண எண் குறியீடுகளைக் காண்க [11-01-2022] L
I N C P E 1
2 3 4 5 6 a. 234156 b. 563421 c. 613524 d. 421356
6. Z=52 மற்றும் ACT = 48 எனில் BAT =? [18-04-2021] a.39 b.41 c.44 d.46 |
13. எண் வரிசை |
1. 3, 6, 9, .........,111 என்ற தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின்
எண்ணிக்கை என்ன?
[08-01-2022] a. 37 b. 38 c. 36 d. 42
2. 3/16, 1/8, 1/12, 1/18 என்ற தொடர் வரிசையின் அடுத்த
உறுப்பு (07/11/2021) a. 1/24 b. 1/27
c. 2/3 d. 1/18
3. பின்வரும் தொடர் வரிசையில் விடுபட்ட எண்ணைக் காண்க.
2², 3², 5², 7², ….. 13² [23-01-2020] a. 9² b. 10² c. 11² d. 8²
4. 4, 7, 10, ………. 118 என்ற முடிவுறு கூட்டுத்தொடரில் நடு
உறுப்பு [04-03-2020] a. 55 b. 58 c. 61 d. 64
5. (1³+2³+3³+.... +15³) - (1+2+3+... +15) இன் மதிப்பு
என்ன? [17-04-2021] a. 14400 b. 14200 c. 14280 d. 14520 6. 1+2+3+...+n = 666 எனில், nஇன் மதிப்பு காண்க
[17-04-2021] a. 37 b. 36 c. 38 d. 35
7. 15² + 16² + 17² + ...... + 28² இன் கூடுதல் காண்க
(07/11/2021) a. 9966 b. 9696 c. 6969
d. 6699
8. ஒரு சினிமா அரங்கின் முதல் வரிசையில் 20 இருக்கைகளும்
மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன. அடுத்தடுத்த ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையை
விட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன. கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் இருக்கும்? [18-04-2021] a. 58 வரிசைகள்
b. 78 வரிசைகள் c. 98 வரிசைகள்
d. 108 வரிசைகள்
9. 10 லட்சம் தேர்வர்கள் இவ்வாண்டு TNPSC தேர்வு எழுதுகின்றனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 1,000 தேர்வர்கள் தேர்வு எழுதினால் எத்தனை தேர்வு மையங்கள்
தேவை [18-04-2021] a. 100 b. 1000 c. 10000 d. 100000
10. 15 நாட்களில் கார்குழலி ரூ.1,800 வருமானமாக பெறுகிறார்
எனில் ரூ. 3,000 ஐ _____ நாட்களில் வருமானமாக பெறுவார் [18-04-2021] a. 25 b. 20 c. 15 d. 10
11. 1³+2³+3³+........+K³=4356 எனில் K-ன் மதிப்ப(11-01-2020) a. 11 b. 22 c. 33 d. 44 |
minnal vega kanitham