எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
CCSE 2 [குரூப் 2 + குரூப் 2A] தேர்விற்கான Preliminary (முதல் நிலை) புதிய பாடத்திட்டம்
பாடத்திட்டம் – பொதுத்தமிழ்
பகுதி – (அ)
இலக்கணம்
1. பொருத்துதல் – (i) பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
2. தொடரும் தொடர்பும் அறிதல் – (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
3. பிரித்தெழுதுக.
4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
6. பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை / பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
11. வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்கல்
12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
14. பெயர்ச்சொல்லின் வகையறிதல்
15. இலக்கணக் குறிப்பறிதல்
16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
21. பழமொழிகள்
பகுதி – ஆ
இலக்கியம்
1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)
அன்பு-பண்பு-கல்வி-கேள்வி-அறிவு-அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.
2. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
3. கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.
4. புறநானூறு – அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
5. சிலப்பதிகாரம்-மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
6. பெரியபுராணம் – நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – திருவிளையாடற் புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
7. சிற்றிலக்கியங்கள்
திருக்குற்றாலக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம், விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடுதூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
8. மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு – இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்)
9. நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
10. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
பகுதி – இ
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
2. மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள்.
3. புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி. சு. செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
4. தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு, ஜவஹர்லால் நேரு – மகாத்மா காந்தி – மு.வரதராசனார் – பேரரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.
5. நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.
6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல்
7. கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
8. தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
9. உரைநடை – மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழி நடை தொடர்பான செய்திகள்.
10. உ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
11. தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
12. ஜி.யு.போப் – வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
13. தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் – அம்பேத்கர் – காமராசர், ம.பொ.சிவஞானம், காயிதேமில்லத் – சமுதாயத் தொண்டு.
14. தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும்
16. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
17. தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் – விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார்.
18. தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற் பயணங்கள் – தொடர்பான செய்திகள்
19. உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.
21. நூலகம் பற்றிய செய்திகள்.
பொது அறிவு
(கொள்குறி வினா வகைக்கான தலைப்புகள்)
1.பொது அறிவியல் :
i. அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு – பகுத்தறிதல் – பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் – கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கொன ஒரு கருவி அறிவியல்.
ii. பேரண் டத்தின் இயல்பு – பொது அறிவியல் விதிகள் – இயக்கவியல் – பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பொடுகளின் பயன் பாடுகள்.
iii. தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள்
iv. உயிரியலின் முக்கியகோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம்,மனித நோய்கள்.
iv. சுற்றுப்புறச் சூழல் மற்றும் சூழலியல்.
2. நடப்பு நிகழ்வுகள்:
(i)வரலாறு – அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு – தேசியச் சின்னங்கள் – மாநிலங்கள் குறித்த விவரங்கள் – செய்திகளில் இடம் பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு – நூல்களும் ஆசிரியர்களும்.
(ii) ஆட்சியியல் – இந்தியாவில் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைமைகளும் – பொது விழிப்புணர்வும் (Public Awareness) பொது நிர்வாகமும் – நலன்சார்அரசுத் திட்டங்களும் அவற்றின் பயன்பாடும், பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள்.
(iii)புவியியல் – புவியியல் அடையாளங்கள்.
(iv)பொருளாதாரம் – தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள்.
(v) அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்.
(vi)கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய வெவ்வேறு துறைகளில் தனித்துவம் கொண்ட ஆளுமைகள்.
3. இந்தியாவின் புவியியல்:
i. அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – இந்திய ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்.
ii. போக்குவரத்து – தகவல் தொடர்பு.
iii. சமூகப் புவியியல்-மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்-இனம்,மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்.
iv. இயற்கைப் பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும் – பருவநிலை மாற்றம்- – பசுமை ஆற்றல்.
4. இந்தியாவின் வரலாறும் பண்பாடு:
i. சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – – விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் தென் இந்திய வரலாறு.
ii. இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்.
(iii)இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு.
(iv)இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்.
5. இந்திய ஆட்சியியல்:
i. இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்.
ii. குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்.
iii. ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்.
iv. கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்.
v. தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி.
vi. பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்.
6. இந்தியப் பொருளாதாரம்:
i. இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்.
ii. வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி கொள்கை மற்றும் பணவியல் கொள்கை – நிதி ஆணையம் – மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி.
iii. இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சனைகள் – மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு, வறுமை.
7. இந்திய தேசிய இயக்கம்:
i. தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், ஜவஹர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார்,இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் பலர்.
ii. தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் பரட்சிகர இயக்கங்கள்.
(iii) வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை.
8. தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்:
i.தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு.
ii. திருக்குறள்:
(அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.
(ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை.
(இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.
(ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை.
(உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.
(ஊ) திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்.
iii. விடுதலைப் போரட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போரட்டத்தில் பெண்களின் பங்கு.
iv. பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக – அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி – நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி – சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.
9.தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்:
(i) தமிழ்நாட்டின் மனிதவள மேம்பபாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் – தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.
(ii) அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் – இடஒதுக்கீட்டுக் கொள்கைகான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும் – தமிழகத்தின் பொருளாதார போக்குகள் – தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத்திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.
iii. சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.
iv. தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்.
v. தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.
(vi) பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள்.
(vii) தமிழகத்தில் மின்னாளுகை.
10. திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE & MENTEL ABILITY)
i. சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெரு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM).
ii. விகிதம் மற்றும் விகிதாசாரம்.
iii. தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.
iv. தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை.
tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in
history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in
tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc,
group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 ,
tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021,
tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test,
subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online
test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online
test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,
minnal vega kanitham