எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
2. தொடரும் தொடர்பும் அறிதல்
(i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
(ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
3. பிரித்தெழுதுக
4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
6. பிழை திருத்தம் - சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல்
7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
11.வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்
12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
14. பெயர்ச்சொல்லின் வகையறிதல்
15. இலக்கணக் குறிப்பறிதல்
16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
21. பழமொழிகள்.
2. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
3.கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள், யாவகை, சிறந்த தொடர்கள்.
4. புறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
5. சிலப்பதிகாரம் - மணிமேகலை - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
6. பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் - திருவிளையாடற் புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
7. சிற்றிலக்கியங்கள்:
திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம் - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து - முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் - இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.
8. மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல் (காளமேகப் புலவர்) - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்
9. நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
10.சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை , உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
2. மரபுக் கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள்.
3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
4. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.
5.நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.
6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் - பொருத்துதல்
7. கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
8. தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பானசெய்திகள்
9. உரைநடை மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் -மொழி நடை தொடர்பான செய்திகள்.
10.உ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
11. தேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு பெருஞ் சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
13.தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர் -அம்பேத்கர் -காமராசர்-ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் - சமுதாயத் தொண்டு.
14. தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்
16. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
17.தமிழ் மகளிரின் சிறப்பு மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் - விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு- தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார்.
18. தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்
19. உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.
21.நூலகம் பற்றிய செய்திகள்.
15. இலக்கணக் குறிப்பறிதல் |
1. பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு
செய்க? (2019 G4) a. பழுத்த பழம் b. பழுக்கும் பழம் c. பழுக்கின்றது d. பழங்கள் பழுத்தன
2. செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு (2019 G4) a. உவமை b. அடுக்குத்தொடர் c. எண்ணும்மை d. உருவகம்
3. தாழ்பூந்துறை - என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு
தருக (2019 G4) a. ஏவல் வினைமுற்று b. உரிச்சொல் தொடர் c. பண்புத்தொகை d. வினைத்தொகை
4. இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்
(2019 G4) a. உம்மைத்தொகை b. பெண்பால் பெயர்கள் c. எண்ணும்மை d. அன்மொழித்தொகை
6. பொருத்துக : (2018 G4) (a) என்றல் 1.முற்றும்மை (b) நுந்தை 2.குறிப்பு வினைமுற்று (c) யாவையும் 3. மரூஉ (d) நன்று 4. தொழிற்பெயர் a. 4 3 1 2 b. 3 4 2 1 c. 2 4 1 3 d. 4 3 2 1
7. நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில்
ஐவர் என்பதன் இலக்கணம் யாது? (2018 G4) a. ஒன்றொழி பொதுச்
சொல் b. இனங்குறித்தல் c. தொடர்மொழி d. பொதுமொழி
8. பின்வருவனவற்றுள் எது உருவகமன்று? (2018 G4) a. மொழியமுது b. அடிமலர் c. தமிழ்த்தேன் d. கயற்கண்
15. தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள்
தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு (2018 G4) a. பண்புத்தொகை b. அன்மொழித்தொகை
c. வினைத்தொகை d. உவமைத்தொகை
9. உம்மைத்தொகையில் உம் என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து
வரும் என்பதை தேர்ந்தெடு. (2018 G4) a. முதலில் வரும் b. இடையில் வரும் c. இடையிலும் இறுதியிலும்
வரும் d. இறுதியில் வரும்.
10. நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை? (2018 G4) a. கொண்டு, உடன் b. பொருட்டு, நிமித்தம்
c. இருந்து, நின்று d. உடைய
11. "ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில்
"ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு (2016 G4) a. முற்றெச்சம் b. தொழிற்பெயர் c. வினையாலணையும்
பெயர் d. வினையெச்சம்
12. "உவமைத்தொகை" இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத
சொல்லை காண்க (2016 G4) a. கயல்விழி b. மலர் முகம் c. வெண்ணிலவு d. தாமரைக் கண்கள்
13. "கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும்
உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை (2016 G4) a. இன்னிசை அளபெடை b. செய்யுளிசை
அளபெடை c. சொல்லிசை அளபெடை d. ஒற்றளபெடை
14. இல்லை - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக. (2016
G4) a. தெரிநிலை வினைமுற்று b. எதிர்மறை பெயரெச்சம் c. குறிப்பு வினைமுற்று
d. வியங்கோள் வினைமுற்று
15. இலக்கணக் குறிப்பு அறிக. (2016 G4) (a) உரிச்சொற்றொடர் 1. சூழ்கழல் (b) வினைத் தொகை 2. தழீஇய (c) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கை (d) சொல்லிசை அளபெடை 4. கூவா a. 2 1 3 4 b. 3 1 4 2 c. 1 3 2 4 d. 4 1 2 3
16. வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு
தொடர்புடையது? (2014 G4) a. பண்புத்தொகை
b. வினைத் தொகை c. வேற்றுமைத்
தொகை d. உம்மைத் தொகை
17. பொருத்துக: (2014 G4) (a) வினைத் தொகை 1. நாலிரண்டு (b) உவமைத் தொகை 2. செய்தொழில் (c) உம்மைத் தொகை 3. பவள வாய் பேசினாள் (d) அன்மொழித் தொகை 4. மதிமுகம் a. 2 4 3 1 b. 4 2 3 1 c. 3 1 4 2 d. 2 4 1 3
18. பொருந்தாத சொல்லை தேர்வு செய்க (2014 G4) a. பெறா அ b. தழிஇ c. அண்ணன் d. கொடுப்பதுஉம்
19. அவன் உழவன்- என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
(2014 G4) a. தெரிநிலை வினைமுற்று b. குறிப்பு வினைமுற்று
c. பெயர்ச் சொல் d. தொழிற்பெயர்
20. பொருத்துக: (2014 G4) (a) இலக்கணமுடையது - 1.புறநகர் ( (b) மங்கலம் - 2.கால் கழுவி வந்தான் ( (c) இலக்கணப் போலி - 3.இறைவனடி சேர்ந்தார் ( (d) இடக்கரடக்கல் - 4. நிலம் a. 2 3 1 4 b. 4 3 1 2 c. 1 2 3 4 d. 3 4 1 2
21. இலக்கணக் குறிப்பறிதல் : (2013 G4) பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க வினைத்தொகை a. செந்நாய் b. சூழ்கழல் c. வெண்மதி d. கண்ணோட்டம்
21. தழீஇ-இலக்கணக் குறிப்பு தருக, (2013 G4) a. செய்யுளிசை
அளபெடை b. ஈறுகெட்ட எதிர்மறை
பெயரெச்சம் c. இன்னிசையளபெடை d. சொல்லிசை அளபெடை
23. இலக்கணக்குறிப்பறிதல் (2013 G4) சான்று: உளமனைய தண்ணளித்தாய் உறுவேனிற்---- பரிவகற்று உறுவேனில்-----இலக்கணம்
தேர்ந்து எழுது a. வினைத்தொகை b. அன்மொழித்தொகை c. தொழில் பெயர் d. உரிச்சொல் தொடர்
24. மனக்குகை-இலக்கணக் குறிப்பு எழுதுக. (2013 G4) a. வினைத்தொகை b. உவமைத்தொகை c. உருவகம் d. உம்மைத்தொகை
25. வருக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க: (2013
G4) a. வினையெச்சம் b. உருவகம் c. உரிச்சொல் தொடர் d. வியங்கோள்வினைமுற்று
26. இலக்கணக் குறிப்பறிதல் (2013 G4) பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத்
தேர்ந்தெடுக்கவும். பண்புத்தொகை a. நெடுந்தேர் b. மலர்ச்சேவடி
c. செங்கோல் d. கருங்குரங்கு
27. சரியாக பொருந்தியுள்ளது எது ? (2012 G4) a. செந்தாமரை வந்தாள் - உவமைத்தொகை b. நீர்வேலி - உருவகம் c. குணமிலார் -பண்புத்தொகை d. குருநிறம்-உரிச்சொற்றொடர்.
28. வினைத்தொகை - என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க
: (2012 G4) a. மூன்று காலமும் மறைந்து
பொருந்தி வரும் b. இறந்த காலம் நிகழ்காலம் மறைந்து பொருந்தி வரும் c. எதிர்காலம் மட்டும் மறைந்து பொருந்திவரும் d. காலத்தை உணர்த்தாது வரும்.
29. கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில்
வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க : (2012 G4) கருநிறம், குருநிறம் a. பண்புத்தொகை, பண்புத்தொகை b. பண்புத்தொகை, வினைத்தொகை c. பண்புத்தொகை, உரிச்சொல் தொடர் d. வினைத்தொகை, உரிச்சொல் தொடர்.
30. கல் என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு சரியாக பொருந்தியுள்ளது
? (2012 G4) a. கல்-கற்றான் - வினையெச்சம் b. கல்-கற்றான் - வினைமுற்று c. கல்-கற்றான்-தொழிற்பெயர் d. கல்-கற்றான் –பெயரெச்சம்
31. கெடுப்பதூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
(2011 G4) a. சொல்லிசையளபெடை b. இன்னிசையளபெடை c. இசைநிறையளபெடை d. செய்யுளிசையளபெடை
32. சொலல் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. (2011
G4) a. பண்புப்பெயர் b. இடப்பெயர் c. தொழில் பெயர் d. காலப்பெயர்
33. நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
(2011 G4) a. வினைமுற்று b. எண்ணுமை c. முதற்போலி d. பண்புப்பெயர்
34. இரீஇ - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கள் (2011
G4) a. இன்னிசை அளபெடை b. சொல்லிசை அளபெடை c. வினைச்சொல்
d. வினைமுற்று
35. உறுபடை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. (2011
G4) a. வேற்றுமைத்தொடர் b. பெயரெச்சத் தொடர் c. வினையெச்சத் தொடர் d. உரிச்சொற்றொடர்
Answer Key = |
minnal vega kanitham