TNPSC GROUP 2/2A, 4 (VAO)
எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
காலம் மற்றும் வேலை
புதிய 7th
& 8th வகுப்பு கணித புத்தகத்தில்
உள்ள Time & Work கணக்குகள் முழுத் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது [85 கணக்குகள்]
இது போதும் குரூப் 2/2A-வுக்கு 2 கேள்விகள் உறுதி
திறனறிவும் மனக்கணக்கு
நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY) |
(i) சுருக்குதல் - விழுக்காடு - மீப்பெறு பொதுக் காரணி
(HCF) - மீச்சிறு பொது மடங்கு (LCM). (ii) விகிதம் மற்றும் விகிதாசாரம். (iii) தனி வட்டி - கூட்டு வட்டி - பரப்பு - கொள்ளளவு -
காலம் மற்றும் வேலை. (iv) தருக்கக் காரணவியல் - புதிர்கள் - பகடை - காட்சிக்
காரணவியல் - எண் எழுத்துக் காரணவியல் - எண் வரிசை |
1. А மற்றும் B ஒரு
வேலையை 10 நாட்களிலும், B மற்றும் Cஅதே வேலையை 15 நாட்களிலும், C மற்றும் A அதே வேலையை
18 நாட்களிலும் முடிப்பர் எனில், B தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
(2013 G2)
a. 30 நாட்கள்
b. 20 நாட்கள்
c. 12 நாட்கள்
d. 18 நாட்கள்
2. A, B, C மூவரும் சேர்ந்து
4 நாட்களில் முடிப்பர். A. தனியே 12 நாட்களிலும் B தனியே, 18 நாட்களிலும் அவ்வேலையை
முடித்தால் Cதனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்? (2013 G2)
a. 10 நாட்கள்
b. 12 நாட்கள்
c. 9 நாட்கள்
d. 18 நாட்கள்
3. 7 சிலந்திகள் 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால் 1 சிலந்தி 1 கூட்டினை
எத்தனை நாட்களில் செய்யும்? (2014
G2)
a. 1
b. 7/2
c. 7
d. 49
4. 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே
வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்? (2015 G2)
a. 20 நாட்கள்
b. 13 நாட்கள்
c. 7 நாட்கள்
d. 28 நாட்கள்
5. 12 அச்சுக் கோப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின்
60 பக்கங்களை முடிப்பர் 20 மணி நேரத்தில், 200 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோப்பவர்கள்
தேவை? (2015 G2)
a. 8
b. 10
c. 12
d. 11
6. ஒரு தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு முதற்குழாய்க்கு 12 மணி
நேரம் ஆகிறது. அதே தொட்டியை நிரப்பவதற்கு இரண்டாம் குழாய்க்கு 6 மணி நேரம் ஆகிறது,
மூன்றாம் குழாய்க்கு 4 மணிநேரம் ஆகிறது. மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து
விடப்பட்டால் தண்ணீர் தொட்டி நிரம்புவதற்கு ஆகும் நேரம் எவ்வளவு? (2016 G2)
a. 2 மணி
b. 3 மணி .
c. 4 மணி
d. 12 மணி
7. 7 பேர் ஒரு வேலையை தினம் 9 மணி நேரம் வேலை செய்து 30 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 10 பேர் தினம் 7 மணிநேரம் செய்தால், எத்தனை நாட்களில் முடிப்பர்? (2016 G2)
a. 28 நாட்கள்
b. 30 நாட்கள்
c. 32 நாட்கள்
d. 27 நாட்கள்
8. A மட்டும் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். B என்பவர் A யைக் காட்டிலும் 60% அதிக திறனுடன் வேலை செய்பவர் எனில் B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (2016 G2)
a. 6 நாட்கள்
b. 7 1/2 நாட்கள்
c. 8 நாட்கள்
d. 8 1/2 நாட்கள்
9. 100 ஆட்கள் ஒரு வேலையை 7 நாட்களில் முடிக்கக் கூடும் எனில் அதே வேலையை 35 நாட்களில் முடிக்க எத்தனைப் பேர் தேவைப்படுவர்? (2017 G2)
a. 20 ஆட்கள்
b. 50 ஆட்கள்
c. 30 ஆட்கள்
d. 25 ஆட்கள்
10. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பார் . இருவரும் சேர்ந்து வேலை செய்து அவ்வேலையை முடித்து ரூ 600 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B இன் பங்கு என்ன ? (2018 G2)
a. 240,360
b. 300,300
c. 360,240
d. 400,200
11. 6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பார். 9 ஆண்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர் . (2018 G2)
a. 10 நாள்
b. 15 நாள்
c. 20 நாள்
d. 25 நாள்
12. ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120 எனில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் அப்புத்தகத்தின் மொத்த பக்கங்கள் எத்தனையாக இருக்கும் (2019 G2)
A. 170 பக்கங்கள்
B. 180 பக்கங்கள்
C. 175 பக்கங்கள்
D. 185 பக்கங்கள்
13. 12 ஆட்கள் ஒரு வேலையை 36 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 18 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள் (2019 G2)
A. 16
B. 24
C. 26
D. 54
Answer
Key = https://www.minnalvegakanitham.in/2022/02/group-2-time-work.html
minnal vega kanitham