Type Here to Get Search Results !

குரூப்-4 Big Secret 675 இந்திய அரசியலமைப்பு, மத்திய அரசு, மாநில அரசு (புதிய சமச்சீர் புத்தகம்) PDF

0
TNPSC GROUP 2/2A, 4 (VAO)


எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

Topics

Questions

இந்திய அரசியலமைப்பு

123

மத்திய அரசு

168

மாநில அரசு

100

அரசியலமைப்பு சட்ட திருத்தம் & ஆண்டு

181 + 103

Total

675


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

இந்திய அரசியலமைப்பு (18-09-2021 to 22-01-2022)

Q1: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 78-வது சரத்தின் கீழ் பாரதப் பிரதமரின் கடமையாகச் சொல்லப்படுவது (22-01-2022)

A) அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருக்குத் தெரிவித்தல்

B) அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் பாராளுமன்றத்திற்குத் தெரிவித்தல்

C) அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவித்தல்

D) அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் இந்தியக் கணக்காயர் மற்றும் தலைமைத் தணிக்கையரிடம் தெரிவித்தல்

 

Q2: எந்த திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது? (22-01-2022)

(A) 12 ம்

(B) 22 ம்

(C) 32 ம்

(D) 42 ம்

 

Q3: இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955-ன் கீழ் ஒருவர் இந்தியக் குடிமகனாக வேண்டுமென்றால் (22-01-2022)

(i) இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்

(ii) இந்திய வம்சாவளியாக இருக்க வேண்டும்

(iii) இந்தியரை மணந்திருக்க வேண்டும்

(iv) குடியுரிமைக்காகப் பதிவு செய்திருக்க வேண்டும்

(A) (i) மட்டும்

(B) (ii) மட்டும்

(C) (i), (ii) மற்றும் (iii)

(D) (i), (ii) மற்றும் (iv)

 

Q4: எந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பின் முகப்புரை திருத்தம் செய்யப்பட்டது? (22-01-2022)

(A) 1956

(B) 1966

(C) 1976

(D) 1980

 

Q5: எந்த அரசியலமைப்புச் சட்டத்தின் படி வாக்குரிமை வயதை 21 லிருந்து 18 வயதாக குறைத்தது? (11-01-2022)

(A) 52 வது அரசியலமைப்புச் சட்டம்

(B) 61 வது அரசியலமைப்புச் சட்டம்

(C) 75 வது அரசியலமைப்புச் சட்டம்

(D) 86 வது அரசியலமைப்புச் சட்டம்

 

Q6: விதி 200 விளக்குவது (11-01-2022)

(A) மாநில பட்டியலில் பாராளுமன்றம் சட்டம் இயற்றுதல்

(B) ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக வைத்துக் கொள்ளல்

(C) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதிகாரம்

(D) மக்களவை சபா நாயகரின் அதிகாரம்

 

Q7: கீழ்கண்டவற்றுள் வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றி சொல்லப்பட்டவைகளுள் சரியான கூற்று எது/எவை? (11-01-2022)

(i) வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதியில் (Part IV) குறிப்பிடப்பட்டுள்ளது.

(ii) வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளின் மீது இயற்றப்படும் சட்டங்களை நீதிமன்றம் தனது அதிகாரத்தின் மூலம் காலவரையறுக்க முடியும்.

(A) (i) மட்டும்

(B) (ii) மட்டும்

(C) (i) மற்றும் (ii) இரண்டும்

(D) மேற்கூறிய அனைத்தும்

 

Q8: கூற்று (A) : இந்திய பாராளுமன்றத்தின் நிரந்தரச் சபையாக மாநிலங்களவை கருதப்படுகிறது.

காரணம் (R): மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். மக்களின் பிரதிநிதிகளாக அல்ல. (11-01-2022)

(A) (A) தவறு ஆனால் (R) உண்மை

(B) (A) உண்மை ஆனால் (R) தவறு

(C) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, மற்றும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம்

(D) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமல்ல

 

Q9: சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துரு __________ உறுப்பாகும். (08-01-2022)

(A) ஆட்சித்துறை சட்டம்

(B) பன்னாட்டுச் சட்டம்

(C) சட்டத்தின் ஆட்சி

(D) அரசியலமைப்புச் சட்டம்

 

Q10: கீழ் சொல்லப்பட்டுள்ளவற்றுள் இந்திய பாராளுமன்றத்தின் இறையாண்மைக்கு உள்ள வரம்புகள் (08-01-2022)

1. அடிப்படை உரிமைகள்

2. நீதிப்புணராய்வு

3. கூட்டாட்சி

4. எழுதப்பட்ட அரசியலமைப்பு

(A) 1,3 மற்றும் 4

(B) 1,2 மற்றும் 3

(C) 1 மற்றும் 2

(D) 1,2,3 மற்றும் 4

 

Q11: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பகுதியின் கீழ் அரசின் கடமைகள் எனக் கருதப்படுபவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன? (08-01-2022)

(A) முகவுரை

(B) அடிப்படை உரிமைகள்

(C) அரசிற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

(D) அடிப்படைக் கடமைகள்

 

Q12: அரசியலமைப்பு விதிகள் 14 முதல் 18 வரை விளக்குவது (08-01-2022)

(A) அடிப்படை கடமைகள்

(B) தேர்தல்

(C) சமத்துவ உரிமை

(D) நீதித்துறை

 

Q13: குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவி இடங்கள் காலியாக இருக்கும் போது குடியரசுத் தலைவராக செயல்படுபவர் யார்? (08-01-2022)

(A) தலைமைத் தேர்தல் ஆணையம்

(B) பிரதமர்

(C) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

(D) லோக்சபா சபாநாயகர்

 

Q14: முதலாவது மக்களவை எப்போது கலைக்கப்பட்டது? (08-01-2022)

(A) 26 ஜனவரி, 1957

(B) 04 ஏப்ரல், 1957

(C) 15 ஆகஸ்ட், 1957

(D) 02 அக்டோபர், 1957

 

Q15: அடிப்படை கடமைகளைப் பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எவை தவறானவை? (20-11-2021)

(A) இந்திய அரசியல் சாசனத்தின் 10 அடிப்படை கடமைகளை அறிமுகப்படுத்த சுரன்சிங் குழு பரிந்துரைத்தது.

(B) இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள அடிப்படை கடமைகள் கருத்து சோவியத் நாட்டிலிருந்து பெறப்பட்டது

(C) அடிப்படைக் கடமைகளை 42வது திருத்தல் சட்டம் அறிமுகப்படுத்தியது

(D) அவை சட்டத்தால் செயல்படுத்தப்படுகின்றன

 

Q16: இந்திய அரசியலமைப்பில் அரசு வழிகாட்டும் நெறிமுறை கொள்கைகளை உட்படுத்தியதன் முக்கிய நோக்கம் (20-11-2021)

(A) சட்ட சீர்த்திருத்தம் மற்றும் சட்ட உருவாக்கம்

(B) மக்கள் நல அரசு

(C) சமூகத்தின் பலவீனப்பட்ட வகுப்பு மக்களின் நலன்களுக்கான சிறப்பு பாதுகாப்பு

(D) நீதிமன்ற நடவடிக்கைகள்

 

Q17: இந்திய பாராளுமன்றத்தில் தனி உறுப்பினர் மசோதா கூற்றுபடி (20-11-2021)

ஆர். : தனி உறுப்பினர் மசோதா நோட்டீஸ். அதன் நோக்கங்கள். காரணங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் அனுமதியுடன் அளிக்கப்படவேண்டும்.

எஸ் : அரசாங்க மசோதாக்கள் போலவே தனி உறுப்பினர் மசோதா நிறைவேற்றப்படும்

(A) எஸ் சரி ஆனால் ஆர் தவறு

(B) ஆர் தவறு ஆனால் எஸ் சரி

(C) ஆர் மற்றும் எஸ் தவறு

(D) ஆர் மற்றும் எஸ் சரி

 

Q18: அரசின் நெறிமுறை வழிகாட்டும் கொள்கைகள் பற்றிய கீழ்க்காணும் வாக்கியங்களை கவனிக்கவுமி (20-11-2021)

(a) அரசின் நெறிமுறை வழிகாட்டும் கொள்கைகளின் நேரடி ஆதாரம், இந்திய அரசு சட்டம். 1935 வழங்கிய அறிவுறுத்தல்கள் ஆகும்.

(b) 1937 ஆம் ஆண்டின் அயர்லாந்து அரசியலமைப்பின் வழிநடத்தும் கொள்கைகளை நீதிமன்றத்தில் நியாயபடுத்த முடியாது.

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

(A) (a) சரி ஆனால் (b) தவறு

(B) (a) மற்றும் (b) சரி

(C) (a) தவறு ஆனால் (b) சரி

(D) (a) மற்றும் (b) தவறு

 

Q19: இந்திய தேர்தல் முறைகளில் ஒற்றை மாற்று வாக்குமூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் (20-11-2021)

(A) கீழ் சபையில் இரண்டு ஆங்கில-இந்தியர்களின் தேர்வு முறை

(B) குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், மாநிலங்கள் அவை உறுப்பினர்களின் தேர்தல் முறை

(C) குடியரசு துணை தலைவரின் தேர்வு

(D) பிரதமரின் தேர்ந்தெடுக்கும் முறை

 

Q20: மாநில சட்டமன்றம் கூடுவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கையானது (20-11-2021)

(A) 30 உறுப்பினர்கள் அல்லது 10-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள்

(B) 10 உறுப்பினர்கள் அல்லது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு இவற்றுள் எது அதிகமோ அது

(C) மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்

(D) மொத்த உறுப்பினர்களில் பாதிக்குமேல் உறுப்பினர்கள்

 

 

 

Q21: கூற்று (A) : 42 வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் ஒரு குறு அரசியலமைப்பு என்று குறிப்பிடப்படுகிறது.

காரணம் (R) : அதிகமான விதிகளை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட திருத்தச்சட்டம். (18-09-2021)

(A) கூற்று(A)ம். காரணம் (R)ம் சரியானவைகள் ஆகும். காரணம் (R) கூற்று (A)க்கான சரியான விளக்கமாகும்

(B) கூற்று(A)ம் காரணம் (R)ம் சரியானவைகளாகும். ஆனால் காரணம் (R) கூற்று (A)க்கான சரியாக விளக்கவில்லை

(C) (A) கூற்று சரி ஆனால் காரணம் (R) தவறு

(D) (A) கூற்று தவறு ஆனால் காரணம் (R) சரி

 

Q22: கீழ்கண்டவற்றில் சரியாக பொருந்தியுள்ளதை கண்டறிக (18-09-2021)

I.தேசிய நெருக்கடி நிலை - உறுப்பு. 352

II. போர் நெருக்கடி நிலை - உறுப்பு.343

III. மாநில நெருக்கடி நிலை - உறுப்பு.356

IV. நிதி நெருக்கடி நிலை - உறுப்பு. 360

(A) I, II மற்றும் IV

(B) II, III மற்றும் IV

(C) I, II மற்றும் III

(D) I, III மற்றும் IV

 

Q23: பின்வருவனவற்றில் ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையை ஒழிக்க பாராளுமன்றத்திற்கு பரிந்துரை செய்வது (18-09-2021)

(A) அந்த மாநிலத்தினுடைய சட்டமன்ற பேரவை

(B) குடியரசுத் தலைவர்

(C) அந்த மாநிலத்தின் சட்ட மேலவை

(D) அந்த மாநிலத்தின் ஆளுநர்

 

 

 

Q24: உச்சநீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் யாருடைய ஆலோசனையின் பேரில் நியமிக்கிறார்? (18-09-2021)

(A) பிரதமர்

(B) தலைமை நீதிபதிகள் தலைமையிலான நீதிபதிகள் குழு

(C) சட்ட அமைச்சர்

(D) குடியரசுத் துணைத் தலைவர்

 

Q25: கீழ்க்காணும் சொற்கள் முகப்புரையில் எந்த வரிசையில் இடம் பெற்றுள்ளன? (18-09-2021)

1. மக்களாட்சி

2. சமதர்மம்

3. இறையாண்மை

4. மதசார்பின்மை

5. குடியரசு

(A) 3, 2, 4, 1, 5

(B) 2, 3, 4, 1, 5

(C) 3, 2, 1, 4, 5

(D) 3, 1, 2, 5, 4

 

Q26: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த அம்சம் ஒவ்வொரு இந்திய குடிமகனையும் அறிவியல் மனப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்தறியும் வேட்கை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது? (18-09-2021)

(A) அடிப்படை கடமைகள்

(B) அடிப்படை உரிமைகள்

(C) அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்

(D) முகவுரை

 

 

 

Q27: ஜனாதிபதி பற்றிய பட்டியல் I ஐ பட்டியல் II உடன் ஒப்பிடுக: (07-11-2021)

(a) விதி 53 - 1. தேசிய அவசர நிலை

(b) விதி 352 - 2. பிரதமர் நியமனம்

(c) விதி 76 - 3. மத்திய அரசின் இந்தியாவின் நிர்வாக அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் உள்

(A) 1 3 4 2

(B) 3 1 4 2

(C) 3 4 2 1

(D) 4 2 3 1

 

Q28: மத்திய அமைச்சரவை தொடர்பாக பின்வரும் கூற்றுக்களை ஆராய்க: (07-11-2021)

I. இந்திய அரசியலமைப்பு விதி 74வது அமைச்சரவையை விளக்குகிறது

II. அது கூட்டுப் பொறுப்பை பெற்றிருக்கவில்லை இவற்றுள்

(A) I மட்டும் சரியானது

(B) II மட்டும் சரியானது

(C) I மற்றும் II சரியானது

(D) I மற்றும் II தவறானது

 

Q29: 12. பின்வரும் வாக்கியங்களில் 42வது இந்திய அரசியலமைப்பு திருத்தத்துடன் பொருந்தாத கூற்று எது? (07-11-2021)

(A) ''சமய சார்பற்ற' என்ற வார்த்தை அரசியலமைப்பு முகப்புரையில் சேர்க்கப்பட்டது

(B) அரசாங்கம் அனைத்து சமயங்களையும் சமமாக பாதுகாத்தது

(C) சமய சார்பற்ற மற்றும் சோஷியலிச என்ற வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது

(D) சில திருத்தங்கள் முகப்புரையில் கடைசி பத்தியில் ஏற்படுத்தப்பட்டது

 

 

Q30: மத்திய மற்றும் மாநில உறவுகளை சீர்திருத்த, முக்கியமான பரிந்துரைகளை வழங்குபவை (07-11-2021)

(i) சர்க்காரியா குழு

(ii) பஞ்சி குழு

(iii) ராஜமன்னார் குழு

(iv) ராயல் குழு

குறியீடுகளை உபயோகித்து சரியான விடையை தேர்ந்தெடுக்க

(A) (i) மற்றும் (ii)

(B) (ii), (iii) மற்றும் (iv)

(C) (i), (ii) மற்றும் (iv)

(D) (i), (ii) மற்றும் (i)

 

Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/02/10th-polity.html

 


tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்