Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

அளவியல் 10th MATHS

அளவியல் 10th MATHS

1. ஒரு உருளை வடிவ பீப்பாயின் உயரம் 20 செ.மீ. மற்றும் அடிப்புறம் 13 செ.மீ. எனில் அதன் வளைபரப்பு காண்க

a. 1760 செ.மீ²


b. 1761 செ.மீ²


c. 1762 செ.மீ²


d. 1763 செ.மீ²



2. ஒரு உருளை வடிவ பீப்பாயின் உயரம் 20 செ.மீ. மற்றும் அடிப்புறம் 13 செ.மீ. எனில் அதன் மொத்த புறப்பரப்பை காண்க

a. 2990 செ.மீ²


b. 2992 செ.மீ²


c. 2991 செ.மீ²


d. 2993 செ.மீ²



3. நீளம் 3 மீ மற்றும் விட்டம் 2.8 மீ உடைய ஒரு சமன்படுத்தும் உருளையை கொண்டு ஒரு தோட்டம் சமன்படுத்தப்படுகிறது. 8 சுற்றுகளில் எவ்வளவு பரப்பை உருளை சமன் செய்யும் ?

a. 211 மீ²


b. 211.1 மீ²


c. 211.2 மீ²


d. 211.3 மீ²



4. தடிமன் 2 மீ உட்புற ஆரம் 6 மீ மற்றும் உயரம் 25 மீ உடைய ஒரு உருளை வடிவ சுரங்கப் பாதையின் உள் மற்றும் வெளிப்புற பரப்புகளுக்கு வர்ணம் பூசப்படுகிறது. ஒரு லிட்டர் வர்ணத்தை கொண்டு 10 சதுர மீட்டர் பூச முடியுமானால், சுரங்கப்பாதைக்கு வர்ணம் பூச எத்தனை லிட்டர் வர்ணம் தேவை?


a. 220 லிட்டர்


b. 221 லிட்டர்


c. 222 லிட்டர்


d. 223 லிட்டர்



5. கித்தானை கொண்டு 7 மீ ஆரமும் 24 மீட்டர் உயரமும் உடைய ஒரு கூம்பு வடிவ கூடாரம் உருவாக்கப்படுகிறது. செவ்வக வடிவ கித்தானின் அகலம் 4 மீட்டர் எனில், அதன் நீளம் காண்க


a. 137 மீட்டர்


b. 137.2 மீட்டர்


c. 137.4 மீட்டர்


d. 137.5 மீட்டர்



6. ஒரு உள்ளீடற்ற அரைக்கோள ஓட்டின் உள் மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே 3 மீட்டர் மற்றும் 5 மீட்டர் ஆகும். ஓட்டின் வளைபரப்பு மற்றும் மொத்த புறப்பரப்பை காண்க


a. 263 சதுர மீட்டர்


b. 264 சதுர மீட்டர்


c. 265 சதுர மீட்டர்


d. 266 சதுர மீட்டர்



7. 2.4 சென்டி மீட்டர் உயரமுள்ள ஒரு திண்ம உருளையின் விட்டம் 1.4 சென்டி மீட்டர் ஆகும். உருளையினுள் அதே ஆரமுள்ள கூம்பு வடிவ குழிவு உருளையின் உயரத்திற்கு ஏற்படுத்தப்படுகிறது எனில் மீதமுள்ள திண்மத்தின் மொத்த புறப்பரப்பு காண்க


a. 17.4 சதுர சென்டி மீட்டர்


b. 17.5 சதுர சென்டி மீட்டர்


c. 17.6 சதுர சென்டி மீட்டர்


d. 17.7 சதுர சென்டி மீட்டர்



8. ஒரு திண்ம அரைக்கோளத்தின் அடிபரப்பு 1386 சதுர மீட்டர் எனில், அதன் மொத்த புறப்பரப்பு காண்க


a. 4155 சதுர மீட்டர்


b. 4156 சதுர மீட்டர்


c. 4157 சதுர மீட்டர்


d. 4158 சதுர மீட்டர்



9. ஒரு உள்ளீடற்ற உருளையின் உயரம் உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே 9 சென்டிமீட்டர் 21 சென்டி மீட்டர் மற்றும் 28 சென்டி மீட்டர் ஆகும். உருளையை உருவாக்க தேவைப்படும் இரும்பின் கன அளவை காண்க


a. 9701 கன சென்டிமீட்டர்


b. 9702 கன சென்டிமீட்டர்


c. 9703 கன சென்டிமீட்டர்


d. 9704 கன சென்டிமீட்டர்



1. இரண்டு கூம்புகளின் விட்டங்களின் விகிதம் 4:3 மேலும் அவற்றின் சய் உயரங்களின் விகிதம் 7:4 எனில் அவற்றின் பரப்புகளின் விகிதம்
  • A. 3:5
  • B. 5:3
  • C. 3:7
  • D. 7:3 ..

2. இரண்டு கூம்புகளின் சய் உயரங்களின் விகிதம் 1:2 மற்றும் அவற்றின் ஆரங்களின் விகிதம் 2:1 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம்
  • A. 4:1
  • B. 1:4
  • C. 2:1..
  • D. 1:2

3. ஓர் கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இருமடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்? (10th New Book) (13/01/2021)
  • a. 6 மடங்கு
  • b. 18 மடங்கு..
  • c. 12 மடங்கு
  • d. மாற்றமில்லை
  • e. விடை தெரியவில்லை

4. ஓர் கூம்பின் அடிப்புற ஆரம் இருமடங்காகவும் உயரம் மும்மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?
  • a. 6 மடங்கு
  • b. 18 மடங்கு
  • c. 12 மடங்கு..
  • d. மாற்றமில்லை

5. எடுத்துக்காட்டு 7.20
இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2:3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தை போல் இரு மடங்கு எனில், அவற்றின் ஆரங்களின் விகிதம் காண்க (10th New Book 294)

  • a. 2:√3..
  • b. √3 :2
  • c. 2 : 3
  • d. 3: 2

6. இரு கூம்புகளின் கன அளவுகளின் விகிதம் 2 : 3 மற்றும் அவற்றின் அடிப்பக்க ஆரங்களின் விகிதம் 1 : 2 ஆகவும் இருந்தால் அவற்றின் உயரங்களின் விகிதம்? (13/01/2021)
  • a. 3 : 8
  • b. 8 : 3..
  • c. 9:2
  • d. 8:1
  • e. விடை தெரியவில்லை

7. இரு கூம்புகளின் கன அளவுகளின் விகிதம் 1:4 மற்றும் அவற்றின் விட்டங்களின் விகிதம் 4:5 எனில் அவற்றின் உயரங்களின் விகிதம் என்ன (25.05.2019)
  • A. 1:5
  • B. 5:4
  • C. 5:16
  • D. 25:64 ..

8. கன அளவுகள் சமமாக உள்ள இரண்டு கூம்புகளின் ஆரங்களின் விகிதம் 2:1 அவற்றின் உயரங்களின் விகிதம் (25/06/2016)
  • a. 1:8
  • b. 1:4 ..
  • c. 2:1
  • d. 4:1

9. பரப்பளவுகள் சமமாக உள்ள இரண்டு கூம்புகளின் ஆரங்களின் விகிதம் 2:1 அவற்றின் உயரங்களின் விகிதம்
  • a. 1:8
  • b. 1:4
  • c. 2:1
  • d. 1:2..



கோளம்

1. கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4:7 எனில் கன அளவுகளின் விகிதம் (14/01/2020) (10th New Book பயிற்சி 7.2 (7))
a. 4:7
b. 64:49
c. 16:49
d. 64:343..

2. கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4:7 எனில் புறப்பரப்பு விகிதம்
a. 4:7
b. 64:49
c. 16:49..
d. 64:343

3. கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 8:27 எனில் ஆரங்களின் விகிதம்
a. 2:3..
b. 4:7
c. 16:49
d. 64:343

4. இரு கோளத்தின் பரப்பளவு விகிதம் 16:9 எனில் அவற்றின் ஆரங்களின் விகிதம்
A. 4:3.
B. 3:4
C. 4:8
D. 8:4

5. இரு கோளத்தின் பரப்பளவு விகிதம் 1:4 எனில் அவற்றின் கன அளவின் விகிதம் (30.03.2019)
A. 1:2
B. 1:4
C. 1:8 ..
D. 1:6

6. இரண்டு கோளங்களின் வளைபரப்புகளின் விகிதம் 9:25 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம் (25.02.2017, 11.11.2018 G2, 11.05.2019)
A. 81:625
B. 27:125…
C. 729:15625
D. 27:75

7. 3cm ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் காற்று செலுத்தப்படும் போது அதன் ஆரம் 9cm ஆக அதிகரித்தால் அவ்விரு நிலைகளில் பலூனின் கன அளவுகளின் விகிதைக் காண்க (03.03.2019 G1)
A. 1:27 …
B. 27:1
C. 27:125
D. 125:27

8. எடுத்துக்காட்டு 7.9
ஒரு கோள வடிவ வளிக்கூணடினுள் (Balloon) காற்று உந்தப்படும் பொது அதன் ஆரம் 12 சென்டிமீட்டரில் இருந்து 16 சென்டிமீட்டர் ஆக உயர்கிறது இரு புறப்பரப்புகளின் விகிதம் காண்க (10th New Book 286)

a. 9:16..
b. 16:9
c. 3:5
d. 5:3

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham