TNPSC GROUP 2/2A, 4 (VAO)
எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
1. இரண்டு அல்லது மூன்று நபர்களை வைத்து கணக்குகள் கேட்கப்படும்
2. ஒருவர் வெளியேறுவது அல்லது சேர்ப்பது போன்று கணக்குகள் அமையும்
3. சதவீதத்தை பயன்படுத்தி தீர்வு காணுதல்
4. மடங்கை பயன்படுத்தி தீர்வு காணுதல்
5. விகிதத்தை பயன்படுத்தி தீர்வு காணுதல்
இரண்டு அல்லது மூன்று நபர்களை வைத்து கணக்குகள் கேட்கப்படும்
A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை __________ நாள்களில் முடிப்பர். (8th New Book) (பயிற்சி 4.4)
a. 1
b. 2
c. 3
d. 4
A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை __________ நாள்களில் முடிப்பர். (8th New Book)
a. 1
b. 2
c. 3
d. 4
A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதேவேளை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (2019 G4)
a. 12 நாட்கள்.
b. 14 நாட்கள்
c. 10 நாட்கள்
d. 18 நாட்கள்
A, B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B, C அதே வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பர். C, A அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். மூவரும் சேர்ந்து மற்றும் தனித்தனியாகவும் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? (8th New Book)
a) சேர்ந்து = 10 நாட்கள் தனித்தனியாக A = 30, B = 20, C = 60
b) சேர்ந்து = 15 நாட்கள் தனித்தனியாக A = 35, B = 25, C = 65
c) சேர்ந்து = 20 நாட்கள் தனித்தனியாக A = 40, B = 30, C = 70
d) சேர்ந்து = 25 நாட்கள் தனித்தனியாக A = 45, B = 35, C = 75
A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள். (26/02/2020) (2014 G1) (2018 PC)
a) 10 நாட்கள்
b) 12 நாட்கள்
c) 14 நாட்கள்
d) 15 நாட்கள்
ஒருவர் வெளியேறுவது அல்லது சேர்ப்பது போன்று கணக்குகள் அமையும்
P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 30 நாள்களில் முடிப்பர் அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வேலையைத் தொடங்கினர். சில நாள்கள் வேலை செய்த பிறகு Q ஆனவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P ஆனவர் 5 நாள்களில் முடிக்கிறார் எனில், தொடங்கியதிலிருந்து எத்தனை நாள்களுக்கு பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்? (8th New Book) (எடுத்துக்காட்டு 4. 24 )
a. 6 நாள்கள்
b. 7 நாள்கள்
c. 8 நாள்கள்
d. 9 நாள்கள்
A மற்றும் B இருவரும் ஒரு வேலையை செய்கிறார்கள். A 12 நாட்களில் வேலையை முடிக்க முடியும் அதே வேலையை B 20 நாட்களில் முடிக்க முடியும் இருவரும் சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்த பின்பு A அவரை விட்டு சென்றுவிட்டார் மீதி வேலையை B எத்தனை நாட்களில் முடிப்பார் (07/10/2017, 04/03/2020)
a. 9
b. 10
c. 12
d. 17
சதவீதத்தை பயன்படுத்தி தீர்வு காணுதல்
A என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (8th New Book)
a. 23
b. 24
c. 25
d. 26
A என்பவர் தனியே ஒரு வேலையை 12 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 60% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (20/08/2017) (26/12/2018)
a. 8
b. 7
c. 8 1/2
d. 7 1/2
மடங்கை பயன்படுத்தி தீர்வு காணுதல்
A ஆனவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்தப் வேலையை, B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க. (8th New Book) (எடுத்துக்காட்டு 4. 25 )
a. 6 நாள்கள்
b. 7 நாள்கள்
c. 8 நாள்கள்
d. 9 நாள்கள்.
A, Bஐ விட இரண்டு மடங்கு வேகமாக வேலை செய்பவர். B ஆல் ஒரு வேலையை தனியாக முடிக்க 12 நாட்கள் ஆகும். எனில் A மற்றும் B இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க தேவையான நாட்களை காண்க (25/07/2017)
a. 4
b. 6
c. 8
d. 18
விகிதத்தை பயன்படுத்தி தீர்வு காணுதல்
A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை ₹200000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில், A பெறும் தொகை ________ ஆகும். (8th New Book)
a. ₹1,10,000
b. ₹1,20,000
c. ₹1,30,000
d. ₹1,40,000
A ஒரு வேலையை 10 நாட்களிலும் B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பார் இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ. 1500 ஈட்டினார் அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வார்? (09/01/2019, 14/07/2018)
a. 600, 900
b.700, 800
c.800, 700
d. 900, 600
Tags
minnal vega kanitham