| 
   
  TNPSC
  GROUP 4 (1 & 2), TNEB, TET, RRB, PC. SLIP TEST 
 | 
 
| 
   
   9th  புவியியல்  
  நீர்க்கோளம் 
 | 
 
51.
_____  பகுதியில் வாழும் மீனவர்கள் இதனை தென்சீனக்
கடலின் கண் என அழைக்கின்றனர். 
52.
கடலடி மலைத் தொடர்கள் இரண்டு _______ விலகி செல்வதினால் உருவாகின்றன. 
53.
கடலடி மலைத் தொடர்கள் ______ பாறைகளால் ஆனவை. 
54.
_______ தொடர்களில் நன்கறியப்பட்டவை மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர், கிழக்கு பசிபிக்
மலைத்தொடர். 
55.
கடலின் ஆழத்தை அளவிட கூடிய ஓர் அலகு _______ 
56.
ஒரே அளவிலான ஆழம் கொண்ட இடங்களை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு _______. 
57.
ஒரே அளவிலான உப்புத்தன்மை கொண்ட பகுதிகளை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு _________.
58.
கடல்நீர் இயக்கங்களில் ______மிகவும் வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
59.
அலை நீர் வீழும் போது ஏற்படும் ஆற்றலை _______ கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது.
60.
இந்தியாவில் கேரளக் கடற்கரையில் உள்ள ______மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில்
அலை ஆற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் 
நிறுவப்பட்டுள்ளன. 
61.
சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில்
கடல் நீர் ______ எனப்படுகின்றன. 
62.
______ உயர்வோதங்கள் மற்றும் தாழ்வோதங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 
63.
அம்மாவாசை மற்றும் முழுநிலவு தினங்களில் ஏற்படும் ஓதங்கள் ______ ஆகும். 
64.
புவி, சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்து கோணத்தில் வரும்போது ____ ஏற்படுகின்றன.
65.
இரண்டு உயர்வ ஓதங்களுக்கு இடையே ______ ஏற்படுகின்றன. 
66.
சந்திரனின் முதல் மற்றும் இறுதி காலப்பகுதியில் அதாவது மாதத்தின்____ முறை தாழ் ஓங்கள்
ஏற்படுகின்றன. 
67.
இந்தியாவில் காம்பே வளைகுடா, கட்ச் வளைகுடா மற்றும் சுந்தரவன சதுப்பு நிலப்  பகுதிகளில் ______ உற்பத்தி செய்ய சாத்தியக்கூறுகள்
நிறைந்த மண்டலங்களாக அறியப்பட்டுள்ளன. 
68.
_____-இல் கடல் சட்டத்தின் மீதான மாநாடு நடைபெற்றபோது ஒவ்வொரு நாட்டிற்குமான கடல் மைல்களை
ஐநா சபை நிர்ணயம் செய்தது. 
69.
ஜோர்டான் மற்றும் பாலவ் நாடுகளுக்கு மூன்று கடல் மைல்களும்; பெனின், காங்கோ குடியரசு
எல்சால்வடார்  பெரு மற்றும் சோமாலியா நாடுகளுக்கு
____ கடல் மைல்களும் நிர்ணயம் செய்தது ஐநா சபை. 
70.
பெருங்கடல்களின் மேற்பரப்பிலும் அதன் அடி ஆழத்திலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும்
நீரினை _____ என்று அழைக்கின்றோம். 
71.
பெருங்கடல் நீரோட்டங்கள் வட அரைக்கோளத்தில் ____ திசையிலும் தென் அரைக்கோளத்தில் _____
திசையிலும் நகருகின்றன.  
72.
கடல் _____ வெப்பத்தின் அடிப்படையில் வெப்ப நீரோட்டம் மற்றும் குளிர் நீரோட்டம் என
வகைப்படுத்தப்பட்டுள்ளன. 
73.
தாழ் அட்சக்கோடு பகுதியிலிருந்து உயர் அட்சக் கோட்டுப் பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்கள்
______ என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு அட்லாண்டிக் பெருங்கடலின் வளைகுடா நீரோட்டம்
மற்றும் பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக் கோட்டு நீரோட்டம். 
74.
உயிர் அட்ச பகுதியிலிருந்து தாழ் அட்சப் பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்கள் ______
என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள நீரோட்டம் மற்றும்
பசுபிக் பெருங்கடலின் பெருவியன் நீரோட்டம் ஆகும். 
75.
தேசிய கடல்சார் நிறுவனம் _____ இல் நிறுவப்பட்டது. 
76.
தேசிய கடல்சார் நிறுவனத்தின் தலைமையகம் கோவாவிலுள்ள _____ ஆகும். 
77.
கடல்சார் அம்சங்கள் பெருங்கடல் பொறியியல், கடல் அகழ்வாய்வு போன்றவற்றை பற்றி அறிந்துகொள்ள
ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனம் ____
78.
கடல் நீர் மற்றும் கடலின் அடிப்பகுதியில் காணப்படக்கூடிய உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளை
நாம் ______ என்கிறோம். 
79.
உலகின் மிக நீளமான பவள பாறை திட்டு _______ ஆகும். 
80.
_____ பவளப்பாறைகள் 2,900 தனித்த பவளத்திட்டங்களையும், 900 தீவுகளையும் உள்ளடக்கி
2000 கிலோ மீட்டர் நீண்டு காணப்படுகிறது, இது 
3,50,000  சதுர கிலோமீட்டர் பரந்து காணப்படுகிறது. 
81.
_____ பவளப்பாறைகளின் அமைவிடம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் அருகே உள்ள
பவளக் கடலில் உள்ளது. 
82.
உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாக பவளப்பாறைகளை ____ அடையாளம் கண்டுள்ளது. 
83.
இந்திய பெருங்கடல் நீரோட்டத்தின் பெயர் _____________ நீரோட்டம் (குளிர்). 
84.
வட பசிபிக் பெருங்கடல் வெப்ப நீரோட்டத்தின் பெயர் ________ நீரோட்டம். 
85.
வட பசுபிக் பெருங்கடல் குளிர் நீரோட்டத்தின் பெயர் ______ நீரோட்டம். 
86.
வட பசிபிக் பெருங்கடல் மற்றொரு வெப்ப நீரோட்டத்தின் பெயர்______ நீரோட்டம். 
87.
வட பசிபிக் பெருங்கடல் மற்றொரு குளிர் நீரோட்டத்தின் பெயர் _______நீரோட்டம். 
88.
தென் பசிபிக் பெருங்கடல் குளிர் நீரோட்டத்தின் பெயர் ____ _அல்லது______ நீரோட்டம்.
89.
வட அட்லாண்டிக் பெருங்கடல் வெப்ப நீரோட்டத்தின் பெயர் ______நீரோட்டம்,  ______  நீரோட்டம்.
90.
வட அட்லாண்டிக் பெருங்கடல் குளிர் நீரோட்டத்தின் பெயர்கள் ______ நீரோட்டம், ________
நீரோட்டம். 
91.
தென் அட்லாண்டிக் பெருங்கடல் குளிர் நீரோட்டத்தின் பெயர்________  நீரோட்டம். 
92.
புவி மற்றும் மனிதகுலத்தின் உயிரோட்டமாக ________ விளங்குகிறது. 
93.
எண்ணெய் வளங்கள் ________களில் அதிகமாக காணப்படுகின்றன. 
94.
பல பில்லியன் நுண்ணிய உயிரியான பவள மொட்டுகளால் பவளப்பாறைத் ______ உருவாக்கப்படுகின்றன.
95.
______ ஆற்றல் வளங்கள், கனிம வளங்கள், உயிரியல் வளங்கள் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
96.
_____ வளங்களுக்கு எடுத்துக்காட்டு எரிசக்தி, கனிமங்கள், ஓத ஆற்றல், அலை ஆற்றல். 
97.
கடல் _____ வளங்களுக்கு எடுத்துக்காட்டு பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உலோகத் தாதுக்கள்,
மணல், சரளைக்கற்கள். 
98.
கடல் _____வளங்களுக்கு எடுத்துக்காட்டு மீன்கள், பிளாங்டன், கடற்புற்கள், பவளப்பாறைகள்.
99.
மிதவெப்ப மண்டல மற்றும் துருவ மண்டலம் ____ பகுதிகள் என அழைக்கப்படுகின்றன. 
100._______
தாழ் அட்சக்கோட்டு பகுதி ஆகும்.

minnal vega kanitham