Type Here to Get Search Results !

TNPSC GROUP 1, 2, 2A MAINS TAMIL எங்கு உள்ளது PDF

3



UNIT 8 `தமிழ்நாட்டின் வரலாறும், மரபும், பண்பாடும்’ எனும் தலைப்பின் கீழாக,

1.1 தமிழர் நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் – செவ்வியல் காலம் முதல் இக்காலம் வரை.

1.2 தமிழ்மொழி வளர்ச்சியில் சங்ககால இலக்கியமும் வரலாற்றுச் சான்றுகளும்.

1.3 தமிழ்நாட்டின் இசை மரபு – நாட்டுப்புற இசை, நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற இசைக் கருவிகள் மற்றும் நாட்டுப்புற நாடகங்கள் – செவ்வியல் காலம் தொடங்கி பின் நவீனக் காலம் வரை அதன் மாறுபாடுகள்.


1.4 நாடகக்கலை - வீதி நாடகம் – நாட்டார் அரங்கம் – மரபு வழியிலான நாடக உத்திகள்.

1.5 சமூகப் பொருளாதார வரலாறு - கடல் கடந்த வணிகம் – சங்க இலக்கியச் சான்றுகள் (பட்டினப்பாலை முதலியன).

1.6 பகுத்தறிவு இயக்கங்கள் - திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்.


1.7 தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு - இடஒதுக்கீடும் அதன் பயன்களும் – தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூகநீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு.

1.8 பெண்ணியம் - சமுதாயத்தில் பெண்ணியம், இலக்கியத்தில் பெண்ணியம் - பல்வேறு கருத்துகளும் பார்வைகளும்.

1.9 இக்காலத் தமிழ்மொழி - கணினித் தமிழ், வழக்குமன்றத் தமிழ், நிர்வாக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்.

ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.



முதன்மைத் தேர்வுக்கான (Mains Exam) முந்தைய பாடத்திட்டத்தில்

1. இந்தியா மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு (Role and Impact of science and Technology in the Development of India and Tamilnadu).

2. ஒன்றியப் பகுதி மற்றும் மாநிலங்களில் நிர்வாகம், சிறப்புக் குறிப்புகளுடன் தமிழ்நாடு (Administration of Union and States with special reference to Tamilnadu).

3. இந்திய / தமிழக சமூக – பொருளாதாரப் பிரச்னைகள் (Socio – Economic Issues in India/Tamilnadu).

4. தேசிய அளவிலான நடப்பு நிகழ்வுகள் (Current Issues at National Level).

5. மாநில அளவிலான நடப்பு நிகழ்வுகள் (Current Issues at State Level).

ஆகிய ஐந்து தலைப்புகளிலான பாடங்கள் இடம்பெற்றிருந்தன.

தற்போது, முதன்மைத் தேர்வானது,

1. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல் (Tamil to English translation).

2. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் (English to Tamil translation).

3. சுருக்கி வரைதல் (Precis writing).

4. பொருள் உணா்திறன் (Comprehension).

5. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் (Hints Development).

6. திருக்குறளிலிருந்து கீழ்க்காணும் தலைப்புகள் தொடர்பாகக் கட்டுரை எழுதுதல் (Essay writing on the following topics from ‘Thirukkural’).







கருத்துரையிடுக

3 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham