Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST 9th 01 வளிமண்டலம் (01 to 50) PDF


ST 9th  01
TNPSC GROUP 4 (1 & 2), TNEB, TET, RRB, PC. SLIP TEST
28/08/2020
ஒன்பதாம் வகுப்பு புவியியல் வளிமண்டலம்

1. 1772 ஆம் ஆண்டில் டேனியல்_______ என்பவர் வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதை கண்டறிந்தார்.

2. 1774 ஆம் ஆண்டு ________ ஆக்சிஜன் வளி மண்டலத்தில் உள்ளதை கண்டறிந்தனர்.

3. நைட்ரஜன் _____சதவிகிதமும் ஆக்ஸிஜன் _____சதவிகிதமும் வளிமண்டலத்தில் நிரந்தர வாயுக்கள் ஆகும்.

4. வளிமண்டலத்தில் -
ஆர்கான்- %
கார்பன்-டை- ஆக்சைடு- %
நீயான் - %
ஹீலியம்- %
ஓசோன்- %
ஹைட்ரஜன்- %உள்ளது.

5. வளிமண்டலத்தின் மிகக்குறைந்த அளவில் காணப்படும் வாயுக்கள் ____

6. வளிமண்டலத்தில் நீராவி ___ சதவீதம் காணப்படுகிறது.

7. வானிலை நிகழ்வுகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக _____ உள்ளது.

8. வளிமண்டலத்தில் காணப்படும் ______பொருள்கள் தூசு துகள்கள், 
உப்புத்துகள்கள், மகரந்தத் துகள்கள், புகை, சாம்பல் ,எரிமலை சாம்பல் 
போன்றவை ஆகும்.

9. ______ காணப்படும் காற்று மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

10. புவியின் வளிமண்டலம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதன் ____ காரணமாகும்.

11. உயிரினங்கள் வாழ்வதற்கு _____ மிகவும் இன்றியமையாதது ஆகும்.

12. சூரிய கதிர்வீச்சு மற்றும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து வரும் வெப்பத்தினை _______ ஈர்த்து வளிமண்டலத்தை வெப்பமாக வைத்துக் 
கொள்கிறது.

13. நைட்ரஜன் ரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் ஒரு ______ வாயுவாக உள்ளது.

14. திட துகள்கள் நீர்க்குவி புள்ளிகளாக செயல்பட்டு நீராவி_______ நிகழ்கிறது.

15. வளிமண்டலம் புவியின் அருகாமை பகுதியில் அடர்த்தியாகவும் உயரச் செல்லச்செல்ல ________ குறைந்தும் காணப்படுகிறது.

16. அயனோஸ்பியரில் அயனிகளும் _____ காணப்படுகின்றன. 

17. வெளியடுக்கிற்கு அப்பால் அமைந்துள்ள அடுக்கு_____ கோளமாகும். 

18. காந்தகோளம் புவியின் ______ ஆகும். 

19. புவியின் காந்த மண்டலம் சூரியனிடமிருந்து வெளிப்படும் ______ தக்க வைத்துக் கொள்கின்றது. 

20. புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் _____ கிலோ மீட்டர் வரை காந்தக்கோளம் என்கிற இந்த காந்தவயல் பரவியுள்ளது. 

21. வளிமண்டல அடுக்குகளின் மேலடுக்கு _____ அடுக்கு என்று அழைக்கப்படுகிறது. 

22. வெளியே அடுக்கில் வாயுக்கள் மிகவும் ______ காணப்படுகின்றது. 

23. அரோரா ஆஸ்ட்ரியாலிஸ் மற்றும் அரோரா பொரியாலிஸ் என்ற வினோத ஒளி நிகழ்வுகள் காணப்படும் அடுக்கு  

24. சூரியனின் மேற்பரப்பில் உருவாகும் மின்காந்த புயலின் காரணமாக  வெளியேற்றப்படும் மின்னணுக்கள் துருவப் பகுதிகளில் நள்ளிரவு வானத்தில் வானவேடிக்கை இன் போது உருவாகும் பல வண்ண ஒளிச்சிதறல் போன்ற காட்சி தோன்றுகிறது இதுவே ______ எனப்படும். 


25. வானிலை மற்றும் காலநிலை _______ நிகழ்வுகளுடன் தொடர்புடையது

26. வளிமண்டலம் _______ அடுக்குகளாக காணப்படுகிறது

27. _______என்ற கிரேக்கச் சொல்லுக்கு "மாறுதல் " என்று பொருள்படும்.

28. ட்ரோபோஸ்பியர்  வளிமண்டலத்தின் ______ அடுக்கு ஆகும்.

29. வளி மண்டலத்தின் கீழ் அடுக்கு துருவப்பகுதியில் ____கிலோ மீட்டர் உயரத்திலும் நிலநடுக்கோட்டுப் பகுதியில் _____கிலோமீட்டர் உயரம் வரையிலும் காணப்படுகிறது.

30. வளிமண்டல கீழ் அடுக்கில் உயரே செல்லச் செல்ல வெப்பநிலை _______.

31.வானிலை நிகழ்வுகள் நடைபெறுகின்ற அடுக்கு வளிமண்டல _____ அடுக்கு.

32. வானிலையை உருவாக்கும் அடுக்கு என்று அழைக்கப்படுவது வளிமண்டல ____

33. வளிமண்டல கீழ் அடுக்கின் மேல் எல்லை__________ என்று அழைக்கப்படுகிறது.

34. வளிமண்டல கீழ் அடுக்கிற்கு மேல் ______ அடுக்கு அமைந்துள்ளது.

35. மீள் அடுக்கு வளிமண்டலத்தில் ____ கிலோ மீட்டர் வரை பரவியுள்ளது.

36. மீளடுக்கில் ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால் ___________ என்று அழைக்கப்படுகிறது.

37. மீள் அடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்லச் செல்ல வெப்பநிலை _______

38. _______ ஜெட் விமானம் பறப்பதற்கு ஏதுவாக உள்ளது.

39. மீள் அடுக்கின் மேல் எல்லை _______ என அழைக்கப்படுகிறது.

40. இடையடுக்கு (மீசோஸ்பியர்) என்பது வளிமண்டலத்தில் _____ கிலோ மீட்டர் முதல் _____ கிலோ மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது.

41. இடை அடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்லச் செல்ல வெப்பநிலை _______.

42. புவியில் இருந்து பெறப்படும் வானொலி அலைகள் _______ தான் புவிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றது.

43. புவியை நோக்கி வரும் விண்கற்கள் _____ அடுக்கில் நுழைந்ததும் ௭ரிவிக்கப்படுகின்றன.

44. இடை அடுக்கின் மேல் எல்லை _____ என்று அழைக்கப்படுகிறது.

45. இடை அடுக்கிற்கு மேல் காணப்படும் அடுக்கு _______ ஆகும்.

46. வெப்ப அடுக்கு சுமார் _____ கிலோ மீட்டர் உயரம் வரை பரவி காணப்படுகிறது.

47. வெப்ப அடுக்கின் கீழ்ப்பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் இது ______ என அழைக்கப்படுகிறது.

48. வெப்ப அடுக்கின் மேல் பகுதியில் உள்ள வாயுக்களின் அளவு சீரற்று காணப்படுவதால் அப்பகுதி _____ என அழைக்கப்படுகிறது.

49. வெப்ப அடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்லச் செல்ல வெப்பநிலை _____ கொண்டே செல்கிறது.

50. அயனோஸ்பியர் காணப்படுவது _____ அடுக்கில்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்