1 ஜூலை 2020 - புதன் தினசரி நடப்பு நிகழ்வுகள்

Share:
 Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.ஏழைகளுக்கு உணவு பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் (பிஎன்ஜிகேஏ ஒய்) 80 கோடிக்கு அதிகமானோருக்கு இலவச ரேஷன் பொருள் வழங்குவதை வரும் நவம்பர் மாதம் வரை நீடிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


2.நாட்டில் கரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைவர் விகிதம் 60 சதவிகித நெருங்குவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.


3.கரோனா நோய் தொற்றுக்கு எதிரான கோவேக்ஸின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது. இவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து ஆகும். இவை தெலுங்கானாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசியத்தின் தீநுண்மி நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டது.


4.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களைப் போன்று மும்பையில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.


5.பாரத் நெட் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும் என்று வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். இத்திட்டம் கிராமப்புற மக்களுக்கு இணைய சேவை வழங்குவதே நோக்கமாகும்.


6.தமிழகத்தில் வீட்டு வசதியை வலுப்படுத்தும் திட்டத்திற்கு ரூபாய் 1514 கோடியையும், வாழ்விட மேம்பாட்டு திட்டத்திற்கு ரூபாய் 378.6 கோடியையும் உலக வங்கி கடனாக கொடுத்து இருக்கிறது. இந்த இரு ஒப்பந்தங்களும் தில்லியில் கையெழுத்தானது.


7.மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான நான்காவது காலாண்டில் ரூபாய் 94.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.


8.கரோனா தீநுண்மி போலவே மிகப் பெரும் கொள்ளை நோயாக உருவெடுக்க கூடிய பன்றிக்காய்ச்சல் தீநுண்மியை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த தீநுண்மி பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றினாலும் தற்போதைய சூழலில் அது மனிதர்களிடையே பரவுவது இல்லை என்றும் அவர்கள் கூறினர்.


9.சாத்தான்குளம் தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது எனவும் வழக்கு சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


10.பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு தமிழகத்தில் 1.10 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை