Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் (June 13 – 20 ) part 2


1. 2020ஆம் ஆண்டுக்கான தொழில் நிறுவனங்களுக்கான போதிய வாய்ப்புகள் காணப்படுவதை அளவிடும் உலகப் போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது
______ விடை : 43வது இடம், மொத்தமுள்ள 63 நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்.



2. கரொனா நோய்த்தோற்றிலிருந்து உயிர்காக்க பிரிட்டன் ஆய்வில் வெளியிட்டுள்ள மருந்தின் பெயர்
______ விடை : டெக்ஸமெதாசோன், சுவாச உறுப்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 3இல் ஒருவரை மரணத்திலிருந்து காக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.



3. தென்கொரியாவுடனான தகவல் தொடர்பு அலுவலகம் வடகொரியாவில் எந்த ஆண்டு திறக்கப்பட்டது
______ விடை : 2018 செப்டம்பர், வடகொரியா அதிபர் – கிம் ஜோங் உன், தென்கொரியா அதிபர் – மூன் ஜே இன்



4. இஸ்ரோவின் புதிய சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுதளம் தமிழ்நாட்டில் எங்கு அமையவுள்ளது
______ விடை : தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம்



5. உலக நீடித்த அறுசுவை உணவு நாள், கோவா புரட்சி நாள் (1961 விடுதலை)
______ விடை : ஜூன் – 18



6. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எந்த ஆண்டு வரை கொல்கத்தா நாட்டின் தலைநகராக விளங்கியது
______ விடை : 1911



7. தற்போதைய நாடாளுமன்றம் எப்போது, யாரால் திறக்கப்பட்டது
______ விடை : 1927 ஜனவரி 18, இர்வின் பிரபு



8. தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைத்தவர்கள்
______ விடை : சர் எட்வின் லுட்டியான்ஸ், சர் ஹர்ப்ர்ட் பேக்



9. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இயங்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவிற்கு வழங்கவுள்ள கடன் தொகை
______ விடை : ரூ. 5714 கோடி (கரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு)



10.  உலக அரிவாள் உயிரணு நாள் (2009 முதல்)
______ விடை :  ஜூன் – 19



11. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் திட்டம்
______ விடை : கரிப் கல்யாண் ரோஜ்கர் , 50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, பீகார் மாநிலம் ககாரியா மாவட்டம் டெலிகர் கிராமத்தில் ஜூன் 20இல் காணொளி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 25 விதமான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.



12. உலகிலேயே அதிக நிலக்கரி வளம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம்
______ விடை : 4வது இடம்



13. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச் சபையில் நடந்த தேர்தலில் இந்தியாவிற்கு கிடைத்த வாக்குகள்/பதிவான வாக்குகள்
______ விடை : 184/192, 2021 ஜனவரி 1 முதல் 2022 டிசம்பர்31 வரை நீடிக்கும், 55 உறுப்பினர்களைக் கொண்ட ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் போட்டியின்றி இந்தியா தேர்வாகியுள்ளது. முதல் முறை 1950-51இல் தேர்வானது. தற்போது 8வது முறை. இதற்கு முன்னர் 2011-2012இல் பதவி வகித்தது.



14. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் (வீட்டோ அதிகாரம்) உள்ள நிரந்தர உறுப்பு நாடுகள்
______ விடை : அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா (10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் உள்ளன)



15. உய்குர் முஸ்லிம்களுக்கான மனித உரிமை மீறல் குறித்து சீனாவுக்கு எதிராக சட்டம் இயற்றிய நாடு
______ விடை : அமெரிக்கா



16. கடந்த (2019) ஆண்டு நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் எந்த மாநில நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
______ விடை : ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சி



17. இந்தியா – சீனா இடையிலான எல்லையிலிருந்து 2 கிமீ சுற்றளவிற்குள், இருநாட்டுஃப் படைகளும் ஆய்தம் உபயோகிக்க கூடாது எனும் ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு
______ விடை : 1996, பிரதமர் தேவே கௌடா


18. உலக வனவாழ்வு நிதியம் தலைமையகம் உள்ள இடம்
______ விடை : சுவிஸர்லாந்து


19.  உலக அகதிகள் நாள் (2000 முதல்)
______ விடை :  ஜூன் – 20



20. இந்தியா – சீனா இடையேயான எல்லைப்பகுதியின் நீளம்
______ விடை : காஷ்மீரின் காரகோரம் பகுதியில் இருந்து அருணாசலப்பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவு கொண்டது.



21. சமீபத்தில் இந்திய – சீன இராணுவத்தினருக்கிடையே நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு எங்குள்ளது
______ விடை : லடாக்



22.  மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு எனப் பெயர்மாற்றம் சேவதற்கு சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தவர்
______ விடை : சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (1967), அண்ணா CM



23.  ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா எப்போது ஏற்கவுள்ளது
______ விடை : 2021 ஆகஸ்டு



24. மத்திய அரசின் நிதி ஆலோசனை அமைப்பின் தற்போதைய தலைவர்
______ விடை : டாக்டர் உர்ஜித் பட்டேல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்