Type Here to Get Search Results !

22 ஜூன் 2020 - திங்கள் தினசரி நடப்பு நிகழ்வுகள்

0


 Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்


1.எல்லையில் சீனா படைகளின் எந்த ஒரு அத்துமீறலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிப்பதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


2.கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட யோகா உதவுகிறது. யோகா பயிற்சியின் அவசியத்தை முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகம் உணர்ந்து உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.



3.இன்றைய கரோனா நோய்தொற்று அபாய காலத்தில் உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஒ) செயலாளர் விளாதிமீர் நோரோவ் கூறினார்.


4.கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்கும் பொருட்டு ரூபாய் 40.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


5.தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் அதிக பரப்பில் சாகுபடி செய்யவும் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க தமிழகத்திற்கு ரூபாய் 1,428 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.


6.சீனாவிலிருந்து இறக்குமதியாகும் தரம் குறைந்த பொருட்கள் தொடர்பான விவரத்தை மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற பொருள்களின் இறக்குமதியை தடுத்து அந்த பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.


7.எல்லையில் சீனாவுடன் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் தேவை அடிப்படையில் தலா ரூபாய் 500 கோடி வரை முக்கிய ஆயுதங்களை கொள்முதல் செய்து கொள்ள முப்படைகளுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.


8.பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 15வது நாளாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை ரூபாய் 8.88 டீசல் விலை ரூபாய் 7.97 உயர்த்தப்பட்டுள்ளது.


9.கரோனா நோய்த்தொற்று பரிசோதனையை விரைந்து மேற்கொள்வதற்காக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி மருத்துவ அறிவியல் கழகத்தில் (ஆர்.எம்.ஆர்.ஐ.எம்.எஸ்) அதிநவீன கரோனா பரிசோதனை இயந்திரத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசி.எம்.ஆர்) நிறுவியுள்ளது.


10.மிகவும் மதிப்புமிக்க 10 இந்திய நிறுவனங்களின் பட்டியலில் 8 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு கடந்த வாரம் மொத்தம் ₹ 1,76,489.28 கோடி உயர்ந்துள்ளது. இதில் மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் அதிக லாபத்தை ஈட்டியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்