Type Here to Get Search Results !

17 ஜூன் 2020 - புதன் தினசரி நடப்பு நிகழ்வுகள்

0
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய சீன படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உட்பட ராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவர் உயிரிழந்தார்.


2.புதுவை மாநில எல்லைகள் ஜூன் 17 முதல் முழுமையாக மூடப்படும் என்று வே.நாராயணசாமி தெரிவித்தார்.



3.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 'சிப்ரோபிளாக்சாசின் ஹைட்ரோகுளோரைடு' என்ற நோய் தொற்று எதிர்ப்பு மருந்து மீது இந்தியா மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்கலாம் என தெரிகிறது.


4.முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 21.83 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரணத் தொகை வரும் 22ஆம் தேதி முதல் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசமி உத்தரவிட்டார்.


5.கடந்த 2019 ஆம் ஆண்டில் ரூபாய் 3.52 லட்சம் கோடி மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈர்த்தது. இது உலக அளவில் ஒன்பதாவது அதிகபட்சம் ஆகும். இந்த அறிக்கையை ஐ.நாவின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்டது.


6.பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து பத்தாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 45 காசுகள் வரையும், டீசல் 93 காசுகள் வரையும் அதிகரிக்கப்பட்டது.


7.அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு இருமடங்காக அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.


8.நிகழாண்டில் பள்ளிகளுக்கு போதுமான வேலை நாட்கள் இல்லாததால் மாணவர்கள் மீதான பாட சுமையை குறைக்கும் வகையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்களை குறைப்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.


9.ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகர் மேயர் ஜுனைத் அஸீம் மட்டுவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவர் பதவியை இழந்தார்.


10.நேபாளத்தின் புனித தலமாக கருதப்படும் பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் ரூபாய் 2.33 கோடி செலவில் தூய்மை வசதிகளை ஏற்படுத்தித்தர இந்தியா உறுதி அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் நேபாள பாரத் மைத்திரி திட்டத்தின் கீழ் கட்டித் தரப்படும்.


11.கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சுவாச உறுப்புகள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மூன்றில் ஒருவரை 'டெக்ஸமெதாசோன்' என்ற ஒவ்வாமை மருந்து மரணத்திலிருந்து காக்கும் என்று பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.


12.மொபைல் செயலி வாயிலான பணப்பட்டுவாடா கடந்த 2019 ஆம் ஆண்டில் 163 சதவீதம் அதிகரித்துள்ளதாக எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் தெரிவித்தது.


13. காவிரி டெல்டா மாவட்டத்தின் பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்