Type Here to Get Search Results !

14 ஜூன் 2020 - ஞாயிறு தினசரி நடப்பு நிகழ்வுகள்

0



1.நாட்டில் கரோனா நோய் தொற்று பாதிப்பு மிக தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.


2.கரோனா தடுப்பு பணிக்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்ற புதிதாக 2,000 செவிலியர்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.




3.தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.


4.கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியாவும் சீனாவும் தங்களது படைகளை படிப்படியாக குறைந்து வருவதாக ராணுவ தலைமை தளபதி m.m. நரவணே தெரிவித்தார்.


5.இந்திய எல்லையையொட்டி உள்ள லிபுலெக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் நேபாள அரசின் சட்டத் திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்ற மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இம்மூன்று பகுதிகளும் இந்தியாவுக்கே சொந்தம் என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது.


6. பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து 7வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 58 காசுகளும் உயர்த்தப்பட்டன.


7.மத்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் சிக்கி தவித்த 227 இந்தியர்களை தாயகம் அழைத்து வரப்பட்டன.


8.கேரளத்தில் கரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்ட நபருக்கு முதன்முறையாக 'அஃபெரிசிஸ்' கருவி மூலம் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது.


9. இந்தியாவின் மூத்த முதல் தர (பஸ்ட் கிளாஸ்) கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி
காலமானார்.


10.கரோனா நோய்தொற்றுக்கு அதிக உயிர்களை பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில் லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் இரண்டாவது இடத்திற்கு வந்தது.


11. அமெரிக்க போலீசார் கைது செய்யப்பட்ட கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்ததை கண்டித்து அந்த நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகில் பல்வேறு பகுதிகளில் நிறவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


12.விலைமதிப்பற்ற உலோகமாக போற்றப்படும் தங்கத்தின் விலை இந்த ஆண்டில் இதுவரை 21 சதவீதம் அதிகரித்துள்ளது.


13.இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு ஜூன் 5ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் முதல் முறையாக அரை டிரில்லியன் டாலரை தாண்டி சாதனை படைத்துள்ளது.


14. பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.


15.அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடைபெறுவது உறுதி என அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்