10 ஜூன் 2020 - புதன் தினசரி நடப்பு நிகழ்வுகள்

Share:

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார் மேலும் பிளஸ் 1 தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.


2.கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு உட்பட மூன்று இடங்களிலிருந்து இந்தியா சீன படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன இதனால் இரு நாட்டு எல்லைகள் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.


3.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை காணொலி முறையில் நடப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
4.பொது முடக்க விதிமுறைகளை மீறியதாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


5.இந்தியாவிற்கு கரோனா நோய் தொற்று தோன்றியதற்கு காரணம் ஐரோப்பிய ஒன்றியம் மத்திய கிழக்கு நாடுகள் ஆக இருக்கலாம் என்று இந்திய அறிவியல் மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.


6.ஆசியாவின் நோபல் என்று அழைக்கப்படும் ரமோன் மகசேசே விருது கரோனா பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
7.ஐ.நாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக உலகத்தலைவர்கள் நேரில் பங்கேற்காத பொதுச்சபைக் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது.


8.மோட்டார் வாகன ஆவணங்களின் காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை