Type Here to Get Search Results !

06 ஜூன் 2020 - சனி தினசரி நடப்பு நிகழ்வுகள்


Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.நாடு முழுவதும் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய மாநில அரசுகளுக்கு 15 நாள் அவகாசம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2.கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இரு நாடுகளை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்திய எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்ட சீன ராணுவத்திற்கான புதிய தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷூ கிலிங் நியமிக்கப்பட்டுள்ளார்.


3.சென்னையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தீவிரமடையும் நிலையில் 5 அமைச்சர்களைக் கொண்ட மண்டல வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்தார்.


4.ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர மற்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தியாவின் முன்னுரிமை இலக்குகளை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார்.


5.வழிபாட்டுத்தலங்கள் வரும் 8ம் தேதி திறக்கப்படுவதையொட்டி அங்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக வழிபாட்டு தலங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.


6.இந்தோ திபெத் எல்லைக் காவல்படை சண்டிகர், குவாஹாட்டி பகுதியில் எல்லை காவல் படை புதிய பிரிவை தொடங்கியது.


7.மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய செய்தி தொடர்பாளராக மூத்த இந்திய தகவல் சேவை (ஐஐஎஸ்) அதிகாரி நிதின் வாகண்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.


8.உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உள்ளாட்சி அமைப்புகளுக்கு திடக்கழிவு மேலாண்மை தொடர்பான வழிகாட்டல்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டுள்ளார்.


9.பிரபல மிதிவண்டி சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான அட்லஸ் தனது கடைசி ஆலையை இழுத்து மூடியது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது இதற்கு காரணம் என கூறப்படுகிறது. முதன்முதலாக ஹரியானாவில் சோனிபட் நகரில் கடந்த 1951 இல் அட்லஸ் சைக்கிளை முதன்முதலாக தொடங்கப்பட்டது. பின் 1965 இந்தியாவின் மிகப் பெரிய சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்தது.


10.மதுரையில் முடிதிருத்தும் தொழிலாளியின் மகள் நேத்ரா ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் அமைதிக்கான தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏழை மக்களின் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கப்பட்டார்.


11. வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 8 தேதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகரும் என்பதால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.